பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 காதலும் கல்யாணமும்

‘ஓ, அதைக் கேட்கிறீர்களா நீங்கள் அதெல்லாம் பழையக் கதையாகிவிட்டதே? அவன் நேற்றே அங்கிருந்து வந்துவிட்டான்’

‘அப்பாடா இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்ததுப் போலிருக்கிறது, எனக்கு’ என்றாள் பாமா.

‘உங்களுக்கு மட்டுமென்ன? எனக்கும் நேற்று அப்படித்தான் இருந்தது. ஆனால் அவன் அப்பாவுக்கு அது ஒன்றும் அவ்வளவுப் பெரிய விஷயமாக இல்லை. அவர் நினைத்தால் குற்றவாளியை நிரபராதியாக்க முடியும் போலிருக்கிறது. நிரபராதியைக் குற்றவாளியாக்க முடியும் போலிருக்கிறது! நான் நினைக்கிறேன், கடவுள்கூட அவருக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கவேண்டுமென்று-சரி, நான் வரட்டுமா?”

‘இன்னும் ஒரே ஒரு நிமிஷம்; என்றுமில்லாத அவசரம் இன்று மட்டும் ஏன் உங்களுக்கு?”

‘அதுவா? அதுதான் எனக்கும் தெரியவில்லைஒருவேளை என்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரிட மிருந்தும் -ஏன், இந்த உலகத்திலிருந்துங்கூட நான் அவசர அவசரமாகப் போய்விட நினைக்கிறேனோ, என்னமோ?”

‘நீங்கள் நினைப்பது உங்களுக்கே தெரியவில்லையா?” ‘தெரியவில்லை, இப்போது’ ‘அதற்குக் காரணம் விரக்தியாயிருக்கலாம்; அந்த விரக்திக்குக் காரணம்?”

‘எதைச் சொல்லுவேன், யாரைச் சொல்லுவேன்? நானாகவே இருக்கலாம்’

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்! ஏனெனில், பல தொல்லைகளுக்கு உங்களை நீங்களே காரணமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்’

‘அது நான் வந்த வழி!-சில சமயம் எதைக் கண்டும் ஒடக்கூடாது என்றுத் தோன்றுகிறது; சில சமயம் ஒடிவிட்டால் தேவலை என்றுத் தோன்றுகிறது எனக்கு!-இந்த