பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 259

வாழ்க்கையில் இவர்களுக்கு உதவக் கடலை விட்டால் வேறு கதி கிடையாதா? மூட்டைப் பூச்சி மருந்தை விட்டால் வேறு வழி கிடையாதா? - கொடுமை, கொடுமை!

இந்தக் கொடுமைக்குப் படிக்காத பெண்கள்தான் பலியாகிறார்கள் என்றால், படித்த பெண்களும் அல்லவா பலியாகிவிடுகிறார்கள்?

இந்த லட்சணத்தில்தான் இவர்களில் பலருக்கு வாழ்க்கையில் உள்ள ஒரே பிரச்னைக் காதல் பிரச்னையாகப் படுகிறது! அந்தக் காதல் பிரச்னையை மையமாக வைத்து எழுதப்படும் கதைகளையும், எடுக்கப்படும் படங்களையும் விழுந்து விழுந்துப் படிக்கிறார்கள்; விழுந்து விழுந்துப் பார்க்கிறார்கள், பலன்? அதற்காக இவர்கள் வாழ்வதைவிடச் சாவதுதான் அதிகமாயிருக்கிறது!

சாகட்டும், சாகட்டும்; காதலுக்காக இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த உலகத்தில் சாகட்டும் - அதை நான் வரவேற்கிறேன், அத்துடன் சுயநலமும் சேர்ந்து சாவதால்!

ஆனால் இந்த அருணாக் காதலுக்காகச் ΕΕ/Ταξ, வில்லையே, காசுக்காகவல்லவாச் செத்திருக்கிறாள்?

பாழும் பணம் அவளுடைய அப்பாவையே அல்லவா அவளுக்கு எமனாக்கியிருக்கிறது!

அவர்தான் என்ன செய்வார், பாவம் தனக்கு மேலுள்ள வர்க்கத்தார் தன்னைவிடக் குறைவாக உழைத்து, தன்னைவிட மேலான நிலையில் வாழ்வதை அவர் ஒவ்வொருக் கணமும் பார்க்கிறார்; அவர்களைப் போலவேத் தானும் வாழவேண்டுமென்று நினைக்கிறார்; அதற்காகத் திருடப் பயந்தாலும் திருடர்களுக்குத் துணையாயிருக்கப் பயப்படவில்லை; சுகானந்தத்தை வெறுத்தாலும் அவருடையப் பணத்தை வெறுக்கவில்லை!

அந்தப் பணத்துக்காக அவர் தன்னை மட்டுமல்ல, தன் மகளையும் இழக்கச் சித்தமாயிருந்திருக்கிறார். ஆனால் அந்த