பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 காதலும் கல்யாணமும்

இழப்பு அவர் எதிர்பார்த்ததற்கு நேர்விரோதமாகவல்லவா நேர்ந்திருக்கிறது, இப்போது?

அனுதாபத்துக்குரியவர்கள், அனுதாபத்துக்குரியவர்கள்: காதலில் பெண்ணுக்கு ஏமாற்றம்; கல்யாணத்தில் அப்பாவுக்கு ஏமாற்றம்! அனுதாபத்துக்குரியவர்கள், அனுதாபத்துக்குரியவர்கள்

யார் அனுதாபத்துக்குரியவர்கள், அவர்களா நானா? அதுகூட யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், யாரை நாம் அனுதாபத்துக்குரியவர்களாக நினைக்கிறோமோ, அவர்கள் நம்மை அனுதாபத்துக்குரியவர் களாக நினைக்கிறார்கள் இப்போது நினைக்கட்டும் நினைக் கட்டும், யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும்.

இவ்வாறு எண்ணிப் பொருமியபடி அவன் தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தபோது , ‘'சார், கிடைத்துவிட்டது சார்’ என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்தான் பியூன் பிச்சையா.

அவ்வளவுதான்; ‘எங்கே கிடைத்தது, எப்போது கிடைத் தது? யார் வந்து சொன்னது, இதை?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டேத் துள்ளி எழுந்தான் மணி.

பிச்சையாவுக்கு ஒன்றும் புரியவில்லை; ‘எதைக் கேட்கிறீர்கள், நீங்கள்?’ என்று தலையைச் சொறிந்தான்.

‘எதைச் சொல்கிறாய் நீ என்று மணி அவனைத் திருப்பிக் கேட்டான்.

‘'காலையில் சைக்கிள் சாவியைக் காணோமென்று தேடிக் கொண்டிருந்தீர்களே, அதுக் கிடைத்துவிட்டது சார்!” “ஓ அதுவா? சரி சரி, கொடு இப்படி!’ என்று அதை வாங்கித் தன் கால்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு “போ போ, போய் உன் வேலையைப் பார்’ என்றான் மணி. அவன் போய்விட்டான்; இது என்ன தொல்லை! நான் விட்டாலும் அந்த நினைப்பு என்னை விடாதுபோலிருக்