பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 261

கிறதே? அவன் ஏதோ சொல்ல வந்தால், நான் ஏதோ கேட்டுத் தொலைக்கிறேனே? என்று எண்ணி மருகிய வனாய், மறுபடியும் தன் வேலையில் முனைந்தான் மணி.

அப்போது சக குமாஸ்தா ஒருவன் அவனை மெல்ல அணுகி, ‘ ஏன் சார், அந்த மோகன் பதைபதைக்கும் வெய்யிலில் கடற்கரையில் திரிந்துக் கொண்டிருக்கிறானே, அதைப் பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு?’ என்று கேட்டான்.

“தெரியாதே’ என்றான் மணி, ரத்தினச் சுருக்கமாக, ‘போங்கள் சார்! அவனைப்பற்றி உங்களுக்குத் தெரியாதென்றால் வேறு யாருக்குத் தெரியப்போகிறது?” என்றான் அவன்.

‘என்னதான் நண்பனாயிருந்தாலும், ஒருவனைப்பற்றி இன்னொருவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கவேண்டு மென்பதில்லை; தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமும் கிடையாது!” என்றான் மணி, மேலும் பேச்சை வளர்த்த விரும்பாமல்.

அவன் போய்விட்டான்; ‘இந்த ஆபீஸ் வேறு எங்கேயாவது இருந்து தொலைத்திருக்கக் கூடாதா? அவனும் கடற்கரையிலேயேத் திரிந்துகொண்டிருக்கிறான்;இதுவும் கடற்கரையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. இவனைத் தொடர்ந்து இன்னும் எத்தனை பேர் வந்து அவனைப் பற்றி என்னிடம் கேட்கப்போகிறார்களோ? அவர்களுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்லப்போகிறேனோ? என்று முணுமுணுத்தவனாய் எடுத்த ‘பைலை எடுத்த இடத்திலேயே விட்டெறிந்துவிட்டு எழுந்து நின்றான் மணி. ‘ஐயா உங்களைக் கூப்பிடுகிறார்’ என்ற அழைப்பு’ டன் அவனுக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்றான் பிச்சையா. ‘நல்ல சமயத்தில்தான் நீயும் வந்து கூப்பிடுகிறாய்; இதோ வந்துவிட்டேன் என்று சொல்!” என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டு, அருகிலிருந்த தண்ணீர்க் கூஜாவை