பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 காதலும்கல்யாணமும்

எடுத்து அதே மூச்சில் ஒரு நெட்டு நெட்டிவிட்டுப் பரந்தாமன் அறைக்குள் நுழைந்தான் மணி.

‘வாருங்கள்; உட்காருங்கள்’ என்றார் அவர். ‘உட்காரச் சொல்வது உங்கள் கடமை; நிற்பது என் கடமை. நீங்கள் விஷயத்தைச் சொல்லுங்கள்’ என்றான் அவன்.

“காலையிலிருந்து நான் உங்களிடம் கொஞ்ச நேரம் தனி யாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்; பேசலாமா, வேண்டாமா என்று தயங்கித் தயங்கி நிற்கிறேன்!”

‘பேச வேண்டுமானால் பேசுங்கள்; பேச வேண்டா மென்றால் பேச வேண்டாம்’

‘'நானும் அப்படிச் சொல்லி, நீங்களும் இப்படிச் சொன்னால் என்ன செய்வதென்று தெரியவில்லையே எனக்கு எதற்கும் இன்னும் கொஞ்ச நேரம் நான் யோசித்துப் பார்க்கிறேன்; நீங்கள் போய் வருகிறீர்களா?’ என்றார் அவர். ‘இதற்குத்தானா என்னைக் கூப்பிட்டீர்கள்!’ என்பது போல் முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு அவன் திரும்பினான்.

‘ஒரு நிமிஷம்!” என்றார் அவர் மீண்டும். “என்ன, சொல்லுங்கள்?’ என்றான் அவன், மறுபடியும் திரும்பி.

‘இன்று மாலை என்னுடன் எங்கள் வீட்டுக்கு வர முடியுமா, உங்களால்?”

‘மன்னிக்க வேண்டும்; இன்று வேறொருவரிடம் நான் போகவேண்டியிருக்கிறது!”

‘நாளை)” ‘அவசியம் வருகிறேன்!” அவன் போய்விட்டான்; ‘இவனைத் தவிர வேறு யாரிடமும் அதைச் சொல்ல முடியாது; ஆனால், எப்படிச் சொல்வது என்றுதான் தெரியவில்லை!” என்று தனக்குத்தானே எண்ணிப் பெருமூச்சு விட்டார், அவர்