பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 265

அவற்றில் ஒன்று, மனிதன் சாவைத் தழுவினாலும், சாவு மனிதனைத் தழுவாதது!

எல்லோருடைய விஷயத்திலும் இது உண்மையாகி விடுவதில்லையென்றாலும், அருணாவின் விஷயத்தில் உண்மையாயிற்று. ஆம், அவள் சாவை விரும்பினாலும் சாவு அவளை விரும்பவில்லை. ஆகவே, நீ போடியம்மா, உன்னை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராயில்லை!” என்பது போல், கடல் அலைகள் அவளை எந்த வேகத்தில் பின்னால் இழுத்துக்கொண்டு சென்றனவோ, அதே வேகத்தில் முன் னால் தள்ளிக்கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய்விட்டன: பேச்சு மூச்சற்றுக் கரையிலே ஒதுக்கப்பட்டுக் கிடந்த அவளை, அந்தப் பக்கமாக அப்போது வந்துக் கொண்டிருந்த பரந்தாமன் பார்த்தார். ப்ார்த்ததும், இந்த ஊர் வம்பெல்லாம் நமக்கு எதற்கு?’ என்று அவர் அப்பால் போய்விடவில்லை; அவ்வாறு போவதற்கு இளம் பிராயத்தில் அவர் பெற்றிருந்த ‘சாரணர் பயிற்சி’யும் இடம் கொடுக்கவில்லை. ஆகவே, அவளுக்கு அளிக்கவேண்டிய முதல் உதவியைத் தானே அளித்த பின், அவளைத் தன் காரிலேயே வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு போனார். வழியில் மூர்ச்சை தெளிந்து எழுந்த அருணா நடந்ததை ஒருவாறுப் புரிந்துக் கொண்டு, “எங்கேப் போகிறீர்கள்?’ என்றுக் கேட்டாள்.

‘ஏன், மருத்துவமனைக்கு’ என்றார் அவர். ‘ஐயோ, வேண்டாம் அங்கே என்னைக் குற்றவாளி யாக்கிவிடுவார்கள்; இங்கேயே இறக்கி விட்டுவிடுங்கள்!” என்றாள் அவள்.

“இங்கேயே இறக்கி விட்டுவிடுவதற்கா உங்களை நான் இவ்வளவு தூரம் கொண்டு வந்தேன்? சும்மா வாருங்கள்; தற்செயலாக நேர்ந்த விபத்து என்று சொன்னால், உங்களை யாரும் அங்கேக் குற்றவாளியாக நினைக்க மாட்டார்கள்’

‘மன்னியுங்கள்; அப்படியெல்லாம் சொல்லி என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் விரும்பவில்லை. அத்துடன்...'