பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 காதலும் கல்யாணமும்

‘அத்துடன் என்ன?” ‘நானே தற்கொலை செய்துகொள்வதாக அங்கே ஒரு கடிதம் வேறு எழுதி வைத்திருக்கிறேன்’

“எங்கே, கடற்கரையிலா?” “ஆமாம்!” ‘ஐயையோ முதலில் அங்கே போய் அதை எடுத்துக் கொண்டு விடவேண்டுமே, நாம்? இல்லாவிட்டால் போலீசார் அனாவசியமாகத் தொந்தரவு கொடுப்பார்களே”

இப்படிச் சொல்லிக்கொண்டே வந்த வழியே காரைத் திருப்பினார் அவர். ஏதோ ஒரு வழி; அந்த வழி மருத்துவ மனைக்குச் செல்லாமலிருந்தால் சரி என்பதுபோல் அருணா அமைதியானாள்

கடற்கரைச் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ‘நீங்களும் வருகிறீர்களா? இல்லை, நானே போய்ப் பார்க்கட்டுமா?’ என்றார் பரந்தாமன்

‘இந்த ஈர உடையில் நான் எப்படி உங்களுடன் வருவேன்? நீங்களே போய்ப் பாருங்கள்’ என்றாள் அருணா. ‘நீங்கள் கடிதம் எழுதி வைத்த இடத்தைப் பற்றிக் குறிப்பாக ஏதாவது...’

‘ஒன்றும் சொல்வதற்கில்லை, நாலைந்து பாடப் புத்தகங்களுக்கு நடுவே அதை நான் எழுதி வைத்தேன் என்பதைத் தவிர!”

‘அப்படியானால் நீங்கள்...?’ ‘கல்லூரியில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் மாணவி’ வாழ்க்கையிலும் மாணவி-வார்த்தை சிறிதாயிருந் தாலும் பொருள் பெரிதாயிருக்கிறதே?

எந்தக் கசப்பான அனுபவத்துக்குப் பிறகு, இந்த ஞானோதயம் இவளுக்கு உண்டாகியிருக்கிறதோ அந்தக் கசப்பான அனுபவம் என்னவாயிருக்கும்?-வேறு என்ன