பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 267

வாயிருக்கப் போகிறது, இந்த வயதில்?-காதல் அனுபவமாய்த்தான் இருக்கும்!

அதற்குப் பரிகாரம் தற்கொலையைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாதா, இந்தப் பெண்களுக்கு?

ஐயோ, பாவம் உதிர்ந்த மலரும், திரிந்த பாலும்கூட ஏதாவது ஒரு வகையில் இந்தக் காலத்தில் உபயோகப்படும் போது, இவர்கள் மட்டும் உபயோகப்படக் கூடாதா?

இவ்வாறு எண்ணமிட்டுக்கொண்டே, அவளைக் கண்டெடுத்த அதே இடத்திலேயே அவளுடையக் கடிதத்தையும் கண்டெடுக்க முயன்றார் பரந்தாமன்; கிடைக்க வில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்து, ‘என்னுடைய முயற்சி வெற்றி பெறவில்லை. உங்களுடைய வீட்டு விலாசத்தைச் சொல்லுங்கள்; நான் உங்களைக் கொண்டு போய் அங்கே விட்டுவிட்டுப் போகிறேன்’ என்றார் அவர் காரில் ஏறி உட்கார்ந்து.

பதில் இல்லை! ‘ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் ‘ என்று கேட்டுக் கொண்டே அவர் திரும்பினார்.

அவள் உட்கார்ந்திருந்த இடம் காலியாயிருந்தது அதற்குள் எங்கே போயிருப்பாள் அவள்? -காரை விட்டுக் கீழே இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தார். சற்றுத் தூரத்தில் அவள் மறுபடியும் கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது-விரைந்துச் சென்று அவளை வழிமறித்து நின்று, “எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘இது என்னத் தொல்லை. இந்த உலகத்தை விட்டு அந்த உலகத்துக்கே போய்விட்டால்கூட இவர் தன்னைத் தொடர்ந்து வந்துக்கொண்டே இருப்பார் போலிருக்கிறதே? என்று நினைத்த அருணா, ‘அதற்குள் வந்துவிட்டீர்களா, நீங்கள்! எங்கேக் கடிதம்?’ என்று கேட்டாள், ஏதாவது கேட்டு வைக்கவேண்டுமே என்பதற்காக.