பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 25

என்றாள், பிளாஸ்க்"கில் தேநீர் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே.

‘அண்ணா சொல்வதைக் கேட்டாயா, அம்மா?-யாரோ திட்டினால் அவனுக்கு உறைக்கவில்லையாம், அடித்தால் வலிக்கவில்லையாம்!’

‘அது யாராம், அது?’ ‘அழகு காட்டினால் அவள் சரோஜாதேவி மாதிரி இருக்கிறாளாம்; காட்டாவிட்டால் தேவிகாமாதிரி இருக்கிறாளாம்!”

‘நாசமாய்ப் போச்சு இதற்குத்தான் தலையிலே கொஞ்சம் எண்ணெய் வைத்துக் குளிடா, தலையிலே கொஞ்சம் எண்ணெய் வைத்துக் குளிடா என்று நான் ஒரு நாளைப்போல அடித்துக் கொள்கிறேன். கேட்கிறானா? வெறும் தண்ணிரைத் தலையிலே கொட்டிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறான்!”

‘எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைவிட எலுமிச்சம் பழம் தேய்த்துக் குளித்தால் நல்லதென்று தோன்றுகிறது, எனக்கு!”

‘உனக்குத் தோன்றுதா, எல்லாம் தோன்றும்-போடி, போ!’ என்றாள் தாயார், தன் மகனுக்காகப் பரிந்து.

‘எதையும் ஆரம்பத்திலேயே கவனித்தால் நல்லது என்பதற்காகச் சொன்னேன்; உனக்குப் பிடிக்காவிட்டால் விட்டுவிடு!” என்றாள் தங்கை

LDறுநாள் காலை கனகுவியுடன் ஏதோ ஒரு சினிமாப்பாட்டைச் சீட்டியடித்துப் பாடிக்கொண்டே மோகன் தன் அறையை விட்டு வெளியே வந்தபோது, குபிரென்று வந்த சிரிப்பை அருணாவால் அடக்க முடியவில்லை; சிரித்து விட்டாள்

மோகன் பாடுவதை நிறுத்திவிட்டு அவளை ஒரு தினுசாகப் பார்த்தான்; அவளும் அவனை ஒரு தினுசாகப் பார்த்து விட்டு, மறுபடியும் சிரித்தாள்!