பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 காதலும் கல்யாணமும்

இந்தச் சமயத்தில் அம்மாவாவது இங்கே இருந்திருக் கலாம்; அதுவும் இல்லை-இரண்டாவது முறையாகப் பெற்றுப்பிழைக்கப்போகும் தன் பெண்ணைப்பார்த்துவிட்டு அவர்கள் எப்போது வரப்போகிறார்களோ, என்னமோ?

அதுவரை இவள் இங்கேயா இருந்துக் கொண்டிருப்பது பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்?

அவர்கள் சொல்வது தன்னைப் பாதிப்பதைவிட, இவளையல்லவா அதிகமாகப் பாதிக்கும்? அதற்குத் தான் இடம் கொடுக்கலாமா? கூடாது; கூடவே கூடாது

இவளுடைய உடல்நிலை கொஞ்சம் தேறியதும் இவளைக் கொண்டுபோய் இவள் வீட்டில் விட்டுவிட வேண்டும். அப்போதும் இவள் அதற்குச் சம்மதிக்கா விட்டால் ...

சம்மதிக்காவிட்டால் என்ன செய்வது, எக்கேடாவது கெட்டுப் போ!’ என்று கழுத்தைப் பிடித்து வெளியேத் தள்ளிவிட வேண்டியதுதான்

இவளுடைய முகத்தைப் பார்த்தால் எந்தப் பாவிக்கும் அப்படிச் செய்ய மனம் வராதுபோலிருக்கிறதே? அப்படி இருக்கும்போதுத் தனக்கு மட்டும் மனம் வரவா போகிறது? அதைப்பற்றி இப்போது யோசிப்பானேன்?-முதலில் அவள் உடம்பு தேறட்டும்...

இந்தத் தீர்மானத்துடன் ஏதாவது மாறுதல் தோன்றி யிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவள் முகத்தை ஆயிரத்தோராவது தடவையாக அவர் ஏறிட்டுப் பார்த்தபோது, ‘பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பாருங்களேன், ஏதாவது பதில் வருகிறதா என்று பார்ப்போம்?’ என்றாள் பக்கத்து வீட்டுப் பார்வதி, அவருக்குப் பின்னால் வந்து நின்று.

இதைக் கேட்டதும், “இன்னுமா நீங்கள் வீட்டுக்குப் போகவில்லை?” என்று வியப்புடன் கேட்டுக்கொண்டே அவளை நோக்கித் திரும்பினார் பரந்தாமன்.