பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 273

‘போனேன்! அவர்தான் சொன்னார், அம்மாகூட ஊரில் இல்லையே, நீயாவது இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு வருவதுதானே? என்று; வந்தேன்!” என்றாள் அவள்.

‘ஒய்வெடுக்க வேண்டிய நேரத்தில் என்னால் உங்களுக்கு வேறுத் தொல்லை என்ன செய்யலாம், தன்னை மறந்து கிடக்கும் ஒருப் பெண்ணுக்கு உடை மாற்றி விட வேண்டுமானால் இன்னொருப் பெண்ணின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கிறது” என்றார் அவர்

‘இதில் என்னத் தொல்லை, எனக்கு அந்த மட்டும் ‘ஆபத்துக்குப் பாவமில்லை என்று நீங்களே அந்தக் காரியத்தில் இறங்கிவிடாமல் என்னை அழைத்தீர்களே, அதைச் சொல்லுங்கள்’ என்றாள் அவள்,வெட்கத்தால் தன் தலையைச் சற்றே தாழ்த்தி.

‘எந்த நிலையிலும் எவருடைய மானத்துக்கும் பங்கம் வராமல் எவன் காக்கிறானோ, அவன்தானேம்மா மனிதன்’ என்றார் அவர்.

இந்தச் சமயத்தில், “எப்படி ஐயா, இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே பார்வதியின் கணவரும் அங்கே வர, ‘அப்படியேதான் இருக்கிறது’ என்றார் பரந்தாமன், அவருடைய வயதுக்குரிய மரியாதையைத் தரவேண்டு மென்பதற்காகத் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று.

‘அப்படியே இருக்கிறதா பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பாருமே என்றார் அவரும்.

‘அதுதானே தெரியவில்லை, எனக்கு’ ‘நல்ல ஆளய்யா, நீர் பெயரைக் கூடத் தெரிந்துக் கொள்ளாமல் என்ன உதவி செய்யவேண்டியிருக்கிறது, உதவி?’

‘உதவிக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம்? அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே, எனக்கு’

கா.க -18