பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 275

அவள் தன் மென்கரத்தால் அவருடைய வன்கரத்தைப் பற்றி, ‘உங்கள் பெயர் என்றாள் மெல்ல.

‘சொல்ல மாட்டேன்’ என்றார் அவர், புன்னகையுடன். ‘ஏன், என்மேல் கோபமா?” ‘இல்லை; உங்களுடையப் பெயரை நீங்கள் சொன்னால்தான் என்னுடையப் பெயரை நான் சொல்வேன்’ ‘உங்கள் என்ன வேண்டியிருக்கிறது, உங்கள் அன்புக்கு உள்ள தடைகளில் அதுவும் ஒன்று என்று உங்களுக்குத் தெரியாதா? எங்கே, உன்னுடைய பெயரை நீ சொன்னால் தான் என்னுடையப் பெயரை நான் சொல்வேன்’ என்று சொல்லுங்கள், பார்ப்போம்?”

அவர் அப்படியே சொன்னார்; அவள் புன்னகையுடன், “என் பெயர் அருணா, உங்கள் பெயர்?’ என்றாள்.

‘பரந்தாமன்’ என்றார் அவர். “சாட்சாத் பரந்தாமனே வந்தாற்போல்தான் வந்திருக்கிறீர் கள்’ என்று சொல்லிவிட்டு, ‘உங்கள் பெயரை நான் சொல்வ தில் உங்களுக்குக் கோபமில்லையே என்றாள் அவள்.

‘இல்லை’ என்றார் அவர். ‘இந்த வீட்டில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை போலிருக்கிறதே, எங்கே சாப்பிடுகிறீர்கள்?” என்றாள் அவள், சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே.

“இங்கேயேதான்; நான் சமைத்துச் சாப்பிடுகிறேன்’ எனறாா அவா.

‘இன்று சமைத்தீர்களா?” ‘இல்லை’ ‘ஐயோ பாவம்! என்னால் பட்டினி வேறு இருக்கி lர்களா, நீங்கள் ‘

‘அது ஒன்றும் எனக்குப் புதிதல்ல; வாாத்துக்கு ஒரு நாள் பட்டினி இருப்பது என் வழக்கம், நீங்கள் வேண்டுமானால் கொஞ்சம் ஆர்லிக்ஸ் சாப்பிடுகிறீர்களா?"