பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 277

“என்ன அபாயம்?’ என்று கேட்டாள் அருணா.

‘என்னுடையத் தலை மறைந்ததும் நீ கடலை நோக்கி ஒடும் அபாயம்தான்’ என்றார் அவர், சிரித்துக்கொண்டே.

‘இனி ஒட மாட்டேன்’ என்றாள் அவள், தானும் சிரித்துக்கொண்டே.

“ஏன்?” என்று கேட்டார் அவர்.

‘இந்த உலகத்தில் சாகத் தூண்டுபவர்கள் மட்டும் இல்லை; வாழத் தூண்டுபவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை இப்போதுதான் தெரிந்தது, எனக்கு’ என்றாள் அவள்!

39. இந்தப் பெண்கள்!

சாட்சாத் விநாயகப் பெருமான் இதுவரை கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம், எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவருக்குத் தன் தாயாரைப்போல் தோன்றுவதுதான் என்று சிலர் சொல்கிறார்கள்.

பரந்தாமனுக்கு அப்படியொன்று ம் தோன்றவில்லை யென்றாலும், அவருடையக் கல்யாணத்துக்கும் அவருடைய தாயார்தான் தடையாயிருந்து வந்தாள்

‘தாய்க்குப் பின் தாரம்’ என்பது உலக வழக்காயிருந் தாலும், தாரத்துக்குப் பின் தாய் என்பதுதானே ‘உலக வாழ்க்கை'யாயிருந்து வருகிறது?-அந்த உலக வாழ்க்கைக்கு அஞ்சித்தான் அவர் தன் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்-அதாவதுத் தன் தாயின்மேல் தான் கொண்டுள்ள அன்புக்கு எந்தவிதமானப் பங்கமும் நேராமல் இருக்க வேண்டுமானால், அவள் உயிரோடிருக்கும் வரை தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும்இதுவே அவருடைய முடிவாயிருந்தது. அந்த முடிவை மாற்ற இன்றுவரை அவருடையத் தாயாராலும் முடியவில்லை; தங்கையாலும் முடியவில்லை.