பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 காதலும் கல்யாணமும்

“ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான் அவன், ஒன்றும் புரியாமல்,

பதில் இல்லை, சிரிப்பதைத் தவிர: ‘பைத்தியமா, உனக்கு?” அதற்கும் பதில் இல்லை, அவளிடமிருந்து-மறுபடியும் மறுபடியும் சிரிப்பதைத் தவிர

‘அம்மா! அருணாவைப் பார் அம்மா! என்னைப் பார்த்ததும் ‘குபீர், குபிர் என்று சிரிக்கிறாள்!” என்று கத்தினான் அவன்.

அவளோ அடுக்களையில் இருந்தபடியே, “அவளுக் கென்ன வேலை, நீ போய் உன் வேலையை பார்’ என்றாள், விஷயத்தைப் புரிந்துகொண்டு.

‘போம்மா! அவள் பாட்டுக்குச் சிரித்துக் கொண்டே இருப்பாள், நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக் கொண்டே இருப்பேனாக்கும்?’ என்று சொல்லிவிட்டு, ‘ஏன் சிரிக்கிறாய், என்னைப் பார்த்து?-சொல்; சொல்லப் போகிறாயா, இல்லையா?” என்று அவள் தலையில் குட்டப் போனான், அவன்.

அவனுடைய குட்டிலிருந்து தப்புவதற்காக, ‘ஒன்று மில்லை அண்ணா! நீ சீட்டி அடித்தால் சிவாஜி கணேசனைப் போல் இருக்கிறாய்; அடிக்காவிட்டால் ஜெமினி கணேசனைப் போல் இருக்கிறாய்!” என்றாள் அவள், கொஞ்சம் பின் வாங்கி நின்று.

அவ்வளவுதான்; “நிஜமாகவா அருணா, நிஜமாகவா?” என்றான் அவன், உச்சி குளிர்ந்து.

‘நிஜமாகத்தான், அண்ணா! வேண்டுமானால் நீ அம்மாவைக் கேட்டுப் பாரேன்?’ என்றாள் அவள், மெல்ல அவனிடமிருந்து நழுவிக்கொண்டே.

“சினிமா என்றாலே ‘சிவசிவா!’ என்று காதைப் பொத்திக்கொள்ளும் அம்மாவுக்கு இந்த மாதிரி