பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 காதலும்கல்யாணமும்

இந்த நிலையில்தான் அவர் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவருடைய உள்ளத்திலே இடம் பிடிக்க முயன்றாள் அருணா. அவள் அப்போதிருந்த நிலையில் அவளைப் பொறுத்தவரை அதுத் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. ஏனெனில், தெரிந்தோத் தெரியாமலோ அவள் அவரால் காப்பாற்றப்பட்டு விட்டாள். இனித் தன் தந்தையின் எதிர்காலக் கனவுகளிலிருந்தும், எல்லையற்ற ஆசைகளிலி ருந்தும் அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அவளுக்குத் தெரிந்தவரை இரண்டே வழிகள்தான் இருந்தன. ஒன்று, அவள் தற்கொலை முயற்சியை மறுபடியும் மேற்கொள்ள வேண்டும்; அல்லது அவள் தன் அப்பாவுக்குத் தெரியாமல் யாரையாவது மணந்து, அதற்குப் பின்னால் அவருடைய ஆசீர்வாதத்தைக் கோரிப் பெறவேண்டும்.

இந்தத் தீர்மானத்துடன்தான் முதல் நாள் காலை அவள் தன் வீட்டை விட்டுக் கிளம்பினாள். ஆனால், அப்பாவுக்குத் தெரியாமல் திருமணம் என்பது நினைப்பதற்குத்தான் சுலபமாயிருந்ததேத் தவிர, நடப்பதற்கு அது அவ்வளவு சுலபமாயிருக்குமென்றுத் தோன்றவில்லை அவளுக்கு. அதிலும், சுந்தரைப் போன்ற வேட்டை நாய்கள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் காதலாவது, அப்பாவுக்குத் தெரியாமல் கல்யாணமாவது? அந்தக் கானல் நீரைத் தேடி ஓடுவதைவிடக் கடல் நீரைத் தேடி ஒடுவதே மேல் என்று நினைத்தாள் அவள். அந்த நினைப்பைச் செயலாக்க அவள் ஓடவும் ஓடினாள்; விழவும் விழுந்தாள். ஆனால் அதுவும் அவளை வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட பிறகு.? ஒதுக்கியதோடு நில்லாமல், இந்த உலகத்தில் சுந்தரைப் போன்றவர்கள் மட்டும் இல்லை; பரந்தாமனைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்’ என்று அவரைக் காட்டாமல் காட்டிவிட்டப் பிறகு?...

சாவு கசந்து, வாழ்வு இனித்தது அவளுக்கு; ஆனால் அவருக்கு? அதைத்தான் தெரிந்துக் கொள்ள முடியவில்லை அவளால்!