பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 காதலும் கல்யாணமும்

காலையில் அவர் போகும்போது கடைசியாகச் சொல்லி விட்டுப் போன இந்த வார்த்தை தன்னுடைய நினைவைச் சுற்றிச் சுற்றி வர, அன்றையப் பொழுது முழுவதையும் கட்டிலிலேயே கழித்துக் கொண்டிருந்தாள் அருணா.

அவ்வப்போது பார்வதி வருவாள்; அவளுடைய தேவைகளைக் கவனிப்பாள். அத்துடன், அவளுடைய துயரத்தைப் பற்றியும் விசாரிப்பாள்; அந்தத் துயரத்துக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லிவிட்டும் போவாள்.

அவள் போனபின், தன்னுடைய உள்ளத்தைப் போலவே வெறிச்சோடிக் கிடக்கும் அந்த வீட்டைப் பார்ப்பாள் அருணா. எவ்வளவுப் பெரிய வீடு இந்த விசாலமான வீட்டைப் போலவே அவருடைய உள்ளமும் விசாலமாய்த்தான் இருக்கிறது. ஆனால்...

ஆனால் என்ன? அவ்வளவு பெரிய உள்ளத்தில் தனக்கென்று ஒரு சிறிய இடத்தைக்கூட அவ்வளவு எளிதில் கொடுத்து விடுபவராயில்லையே, அவர்? முதல் நாள் மாலை தான் அவ்வளவு தூரம் மறுத்தும் மறுநாள் காலை ‘சாயந்திரம் நீ விரும்பினால் உன்னைக் கொண்டு போய் உன்னுடைய வீட்டில் விட்டுவிடுகிறேன்’ என்று தானே அவர் சொல்கிறார்:

சரி, என்னுடைய வீட்டிற்கு நான் போக விரும்பாவிட்டால அவர் என்ன செய்வார், என்னை? தன்னுடைய வீட்டிலேயே வைத்துக் கொண்டு விடுவாரா? அல்லது கழுத்தைப் பிடித்து தள்ளிவிடுவாரா?

இதைத்தான் காலையிலேயே கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் நான்; கேட்கவில்லை. அதனா லென்ன, இப்பொழுது வந்ததும் கேட்டுவிட்டால் போகிறது!

இந்த முடிவுடன் அவள் எழுந்து விளக்கைப் பொருத்தப் போனபோது, வாசலில் கார் வந்து நிற்கும்