பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 285

சத்தம் கேட்டது. அதோ அவரும் வந்துவிட்டார்’ என்ற மகிழ்ச்சியுடன் அவள் பொருத்திய விளக்கைக் கைகூப்பி வணங்கிவிட்டு வெளியே வந்தாள்.

‘'அருணா இப்படிக்கூடச் செய்யலாமா நீ?” என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்றான் மோகன்

அவ்வளவுதான்; அவளுடைய மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் பறந்தது. ஆனாலும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல், ‘அப்படி என்ன செய்துவிட்டேன் நான். அதற்கும் குறுக்கே தான் இவர் வந்து நின்று விட்டாரே வா அண்ணா, வா பாமா’ என்று அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள் அவள்.

அதற்குள் காரைக் கொண்டு போய் அதற்குரிய இடத் தில் நிறுத்திவிட்டு வந்தப் பரந்தாமன், ‘என்ன அருணா எப்படி இருந்தது, என் சமையல்?’ என்றுக் கேட்டார்.

‘'சமைத்தவர்களைத் தவிர வேறு யாரும் அதைச் சாப்பிட முடியாதுப் போலிருந்தது’ என்றாள் அவள்.

‘அப்படியானால் நீ அதைச் சாப்பிடவேயில்லையா?” ‘'சாப்பிட்டேன், நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமத்துக்காக’

‘நன்றி, அதேமாதிரி இப்பொழுது நான் சுடப்போகும் ரொட்டியையும் நீங்கள் அனைவரும் துணிந்து சாப்பிட்டு என்னைக் கெளரவிக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டேச் சென்று, தன் ஆபீஸ் வேடத்தைக் களைந்து விட்டு, அடுக்களைக்குள் நுழைந்தார் அவர்.

‘ஏன், இவரைத் தவிர இந்த வீட்டில் வேறு யாரும் கிடையாதா?’ என்று கேட்டாள் பாமா.

‘இல்லை; இருந்த ஓர் அம்மாவும் பெண்ணின் பிரசவத்துக்காக ஊருக்குப் போயிருக்கிறாராம்’ என்றாள் அருனா.