பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 287

அவளுடையக் கேள்வியில் இருந்தக் குத்தலை ஒருவாறு புரிந்துக் கொண்டப் பரந்தாமன், “இல்லை; நீதான் உன் வீட்டு முகவரியையே என்னிடம் சொல்ல விரும்ப வில்லையே அவர்களை எப்படி என்னால் இங்கே அழைத்துக் கொண்டு வர முடியும்?’ என்றார் அமுத்தலாக,

‘ஏன், அண்ணாவைக் கேட்டிருந்தால் தெரிந்திருக்குமே?”

“மறந்துவிட்டேன்’

‘ஐயோ பாவம்! இப்பொழுது வேண்டுமானால் கேட்டுக் குறித்து வைத்துக் கொள்கிறீர்களா?’

‘'வேண்டாம்; அவசியமானபோது அதை நானேத் தெரிந்துக் கொள்கிறேன்!”

4 4

ஏன், இப்பொழுது தெரிந்துக் கொள்ள விரும்ப வில்லையா?”

‘இல்லை. ஏனெனில், இன்னும் கொஞ்ச நாட்கள் நீ இங்கேயே அஞ்ஞாத வாசம் செய்வதுதான் நல்லது என்று உன் எதிர்கால அண்ணி நினைக்கிறார்!”

இதைக் கேட்டதும் அதுவரை புயல் வீசிக் கொண்டிருந்த தன் உள்ளத்தில் அமைதித் தவழ, ‘உண்மையாகவா?’ என்றாள் அருணா.

“ஆமாம், அருணா! உன் மரண சாஸ்னத்தால் கூட அப்பாவின் மனத்தை மாற்ற முடியவில்லை; அப்படி இருக்கிறது அவருடையப் பேச்சு, நடவடிக்கை எல்லாம். அதனால் தான் சொல்கிறேன், இன்னும் கொஞ்ச நாட்கள் நீ இங்கேயே இருப்பது நல்லதென்று’ என்றான் மோகன், என்றுமில்லாதப் பொறுப்புணர்ச்சியுடன்.

‘அதற்கென்ன அண்ணா, அப்படியே இருக்கிறேன்;

அவரைப் பொறுத்தவரை இறந்தவள், இறந்தவளாகவே இருக்கக்கூட நான் தயார்’ என்றாள் அருணா.