பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 காதலும்கல்யாணமும்

‘அதுதான் சரி அதற்குக் குறுக்கே நிற்க அந்தக் கடிதம் ஒன்றுதான் இருந்தது; அதுவும் தான் இப்போது உங்களிடமே வந்து சேர்ந்துவிட்டதே?’ என்றாள் பாமா.

“ஆனால் எங்கே இருப்பது? அதுதான் இப்போதுள்ளப் பிரச்னை’ என்றான் மோகன்.

‘அதுதான் நீங்கள் என்னை இங்கேயே இருக்கச் சொன்னதாக இவர் சொல்கிறாரே, இருக்கிறேன்!”

‘இங்கேக் கொஞ்ச நாட்கள் வேண்டுமானால் இருக்கலாம்; அதற்குப் பிறகு?”

‘கல்யாணத்தைச் செய்து, அவள் கணவனுடன் அவளை அனுப்பிவிடுங்கள்?”

இதைச் சொல்லிவிட்டுப் பரந்தாமன் அருணாவை ஒரு தினுசாகப் பார்த்தார்; அவளும் அவரை ஒரு தினுசாகப் பார்த்து, ‘எங்கே விற்கிறான் அந்தக் கணவன், என்ன விலை?” என்று கேட்டாள் எரிச்சலுடன்.

‘விசாரித்துச் சொல்கிறேன்’ என்றார். அவர், அப்போதும் அமைதியாக.

அதற்குள் பாமா குறுக்கிட்டு, ‘ஏன், எங்கள் வீட்டுக்கு வேண்டுமானால் வந்து இருக்கட்டுமே? என்றாள் மோகனிடம்.

‘இருக்கலாம். ஆனால் அவள் இருக்கும் இடம் அப்பாவுக்குத் தெரிந்து அவர் ஒரு வேளை வந்தாலும் சமாளிக்கக் கூடிய இடமாயிருக்க வேண்டும்; உங்களால் முடியுமா, அவரைச் சமாளிக்க?’ என்று மோகன் கேட்டான். “அது கொஞ்சம் சந்தேகம்தான்’ என்றாள் பாமா. இந்தச் சமயத்தில் பரந்தாமனின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே, ‘இவரால் மட்டும் அப்பாவைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கிறாயா, அருணா? எனக்குத் தோன்றவில்லை. இவர் அவரைக் கண்டதும் ஒடியே விடுவார்’ என்றான் அவருடைய வீரத்தைச் சற்றே சோதிக்க எண்ணி.