பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 289

“வந்து பார்க்கட்டும். அதற்குப் பிறகு நான் ஒடுகிறேனா, இல்லையா என்பதை நீயேத் தெரிந்துக் கொள்வாய்’ என்றார் அவர், அடக்கமாயிருந்தாலும் தாமும் ஒர் ஆண் பிள்ளை’ என்ற உணர்வுடன்.

‘சரி, அதைப் பற்றிப் பின்னால் யோசிப்போம்; இப்போது நான் வருகிறேன்!” என்று மோகன் எழுந்தான்.

‘அதற்குள் என்ன அவசரம், உட்கார் அண்ணா!’ என்றாள் அருணா.

‘ரொம்ப அழகுதான்! இங்கே உன்னைப் பார்த்ததும் நான் சாப்பிட்டுவிட்டேன்; அங்கே அம்மா சாப்பிட வேண்டாமா? உன்னுடைய கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அவர்கள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருக்கிறார்களோ”

‘அப்படியானால் இங்கே நான் இருப்பதை நீ அவர்களிடம் சொல்லிவிடப் போகிறாயா, என்ன?”

‘சொல்லாமல் எப்படி இருக்க முடியும், அப்பாவிடம் சொல்லாவிட்டாலும் அம்மாவிடம் சொல்லித்தானே ஆக வேண்டும்?”

‘அந்த அசட்டு அம்மா அவரிடம் சொல்லாமல் இருக்குமா?”

‘சொல்ல வேண்டாம் என்றால் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கும் அவரிடமுள்ளக் குறைபாடுகள் தெரியத் தானேத் தெரிகின்றன? இருந்தாலும் கடமை என்று ஒன்று இருக்கிறது பார். அது சிலருடைய விஷயத்தில் மடமைக்கும் ஆதாரமாயிருப்பதுபோல, அவர்களுடைய விஷயத்திலும் ஆதாரமாயிருந்திருக்கிறது இல்லாவிட்டால் எல்லாம் தெரிந்திருந்தும் அவரைத் தட்டிக் கேட்காமல் அவர்கள் இருந்திருப்பார்களா?”

‘என்னமோ அண்ணா, எனக்கென்னமோ பயமாய்த்தான் இருக்கிறது’

கா.க -18