பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 291

முதல்நாள் மாலை தன் மகனே தன்னைக் கொல்ல நினைக்கிறான் என்று சுகானந்தம் சொன்னது வேறு அவருடைய நினைவுக்கு வந்து, அவரை என்னவெல்லாமோ எண்ண வைத்தது.

அங்கேப் பணத்துக்காக மகன் தந்தையைக் கொல்ல நினைக்கிறான்; இங்கேப் பணத்துக்காகத் தந்தை மகளைக் கொன்று விட்டார்.

இப்படி நினைத்ததும் அவர் தன்னைத்தானே கண்டு வெட்கியதோடு நிற்கவில்லை; சிரிக்கவும் செய்தார்.

கண்ணிருடன் சிரிப்பும் கலந்த அந்த வேளையிலே, ‘'சார், சார்’ என்றக் குரல் வாசலிலிருந்து வந்தது.

‘யார், அது?’ என்றுக் கேட்டபடி, மாடி வராந்தாவில் இருந்தவாறே வாசலை எட்டிப் பார்த்தார் அவர்; அபேஸ் அய்யாசாமி வழக்கம்போல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அவருடைய அழைப்பை எதிர்பார்த்து அங்கே நின்றுக் கொண்டிருந்தான்

ஆனால் அவரோ இன்று அவனை வழக்கம்போல் வரவேற்கவில்லை; அதற்குப் பதிலாக அவனைப் பார்த்ததும் பார்க்காதவர்போல் திரும்பி, ‘பகலில் பெரிய மனிதர்களுக்குத் துணை; இரவில் திருடர்களுக்குத் துணை ஏண்டா ஆபத்சகாயம், பாழும் பணத்துக்காக இப்படி ஒரு வேடம் நீ போடத்தான் வேண்டுமா? பதவி வகித்த காலத்தில் நீ பெற்ற அனுபவம் அதற்குத்தான் பயன்பட வேண்டுமா?’ என்று தன்னைத் தானேக் கேட்டுக் கொண்டு, வேண்டாம்; அந்தப் பாவத்தை இனி நீ செய்ய வேண்டாம்!” என்று தனக்குத் தானே பதிலும் சொல்லிக் கொண்டார்

அப்போது, ‘யாரப்பா, அது ‘ என்று கேட்டுக் கொண்டே மோகன் உள்ளே நுழைய, “நான்தான் அபேஸ் அய்யாசாமிங்க; அப்பாவைப் பார்க்கணுங்க’ என்றான் அவன், வழக்கம்போல்.