பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 காதலும்கல்யாணமும்

‘அதைச் சொல்லிக் கொண்டு வாசலிலேயே நிற்பானேன்? நீங்கள் தான் இந்த வீட்டுக் கெளரவ விருத்தினராச்சே, நேராக மேலேப் போகலாமே!” என்றான் அவன், எரிச்சலுடன்.

அவ்வளவுதான்; ‘அனுப்பாதே, அவனை மேலே அனுப்பாதே’ என்று அங்கிருந்தபடியேக் கத்தினார், ஆபத்சகாயம்.

மோகனுக்கு ஒன்றும் புரியவில்லை; கெளரவ விருந்தினர்களின் காப்பாளரா இப்படிச் சொல்கிறார்!’ என்ற வியப்புடன் அவன் அவரை அண்ணாந்துப் பார்த்தான்.

‘போகச் சொல்; அவனை உடனே அங்கிருந்துப் போகச் சொல்’ என்றார் அவர், மீண்டும்.

இப்போதுதான் அபேஸ் அய்யாசாமியும் ஒன்றும் புரியாமல், ‘என்ன, என்னையாப் போகச் சொல்கிறார்!” என்றான் மோகனிடம்.

“ஆமாம், உன்னைத்தான்’ என்றான் மோகன், அதுதான் சமயமென்று அவன் முகத்தில் அடித்தாற்போல் கதவைச் சாத்தி.

அப்பாடா! நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தான் மோகன்; இல்லாவிட்டால் அவனை விரட்டுவது அவ்வளவு எளிதாயிருந்திருக்காது தனக்கு. இப்போது மட்டுமென்ன, அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லையேத் தன்னால்?

இப்படி ஒரு பெருமூச்சுடன் அவர் கீழே இறங்கி வந்து, ‘ஏண்டா மோகன், இப்போது நீ கடற்கரையிலிருந்துதானே வருகிறாய்?” என்றார் பரிவும் பாசமும் ஒன்றையொன்று முந்த.

“ஆமாம். ஏன், என்ன வேண்டும் உங்களுக்கு?’ என் றான் அவன், அப்போதும் அவரைப் புரிந்து கொள்ளாதவன் போல.

‘ஒன்றுமில்லை; அருணாவைப் பற்றி ஏதாவது..."