பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 293

அவர் முடிக்கவில்லை; அதற்குள் அவன், ‘தெரியவில்லை!” என்று ஒரு கைக்கு இரு கையாக விரித்துவிட்டு நழுவினான்.

‘சரி, நான் போய்ப் பார்க்கிறேன்’ என்று அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவர் கிளம்பினார்.

அது என்னவோ போலிருந்தது அவனுக்கு நின்று, ‘இந்த இருட்டிலா?’ என்றான், அப்போதும் உண்மையை அவரிடம் சொல்லாமல்.

‘வெளியே இருட்டாயிருந்தால் என்ன, உள்ளேதான் இப்போது வெளிச்சம் அடிக்க ஆரம்பித்து விட்டதே’ என்று சொல்லிக் கொண்டே அவர் நடந்தார்.

அதற்குமேல் அவன் அவரைத் தடுக்கவில்லை; ‘அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான்’ என்று தன் அம்மாவைத் தேடினான், அந்தரங்கமாக விஷயத்தைச் சொல்ல. அவள் கிடைக்கவில்லை

எங்கே போயிருப்பாள் - இந்தக் கேள்வியுடன் அவன் அந்த வீட்டை ஒரு முறைக்கு இரு முறையாக வலம் வந்துக் கொண்டிருந்தபோது, வாசலில் வாடகைக் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது; திரும்பிப் பார்த்தான். அன்னபூரணியம்மாள் ஆனந்தப் பரவசத்துடன் அதிலிருந்து இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தாள்!

‘எங்கேம்மாப் போய் வருகிறாய், நீ'ை என்றான் மோகன் வியப்புடன்.

‘ஏன், அருணாவின் வீட்டுக்குத்தான்’ என்றாள் அவள். ‘அருணாவின் வீட்டுக்கா அது எங்கே இருக்கிறது?” என்றான் அவன் மேலும் வியப்புடன்.

‘போடா, போ எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? எல்லாம் தெரியும்; கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீ அந்தக் குட்டி பாமாவுடன் வந்து அவளைப் பார்த்தாயே, அதுகூட எனக்குத் தெரியும்!"