பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 காதலும்கல்யாணமும்

‘'அட, கடவுளே! அப்போது நீ எங்கே இருந்தாய்? எப்படி அங்கே வந்தாய்?”

“எல்லாம் பார்வதியின் கிருபை’ ‘பார்வதியின் கிருபையா? அது யார், அந்தப் பார்வதி?” ‘அப்படிக் கேள், சொல்கிறேன். அவள் அங்கே எங்கள் ஊர்க்காரி, இங்கே அருணாவின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரி!’

‘இது என்ன வம்பு அருணாவின் வீடு, அருணாவின் வீடு’ என்று அடிக்கொரு தரம் சொல்கிறாயே, அது எங்கள் ஆபீசரின் வீடு, அம்மா!’

‘அதுவும் தெரியும், எனக்கு அதனால் என்ன, நாளைக்கு அவர்தானே அவள் கழுத்தில் மாலையிடப் போகிறார்?”

‘அதுவும் பார்வதியின் கிருபையால்தான் நடக்கப் போகிறதாக்கும்?”

“ஆமாம்; இத்தனைக்கும் முதல் நாள் இரவுவரை அருணா என்னுடைய மகள் என்பதேப் பார்வதிக்குத் தெரியாதாம். மறுநாள் காலை அவளைப் பற்றி அவளிடமே விசாரித்தபோதுதான், அவள் என்னுடைய மகள் என்பதுப் பார்வதிக்குத் தெரிந்ததாம். அதற்குப் பிறகு அவள் அருணாவிடமே அதைப் பற்றி பேசியிருக்கிறாள். அப்படிப் பேசும்போது அவளுடைய மனமும் அதைத்தான் விரும்புகிறதென்று பார்வதிக்குத் தெரிந்திருக்கிறது. உடனே இங்கே ஓடி வந்தாள் அது சம்பந்தமாக என்னுடன் பேச. நான்தான் அதைப்பற்றி இங்கேப் பேச வேண்டாமென்று அவளை அங்கே அழைத்துக் கொண்டு போனேன்!’

‘அப்படிச் சொல்லு; இல்லாவிட்டால் அவள் இருக்கும் இடம் உனக்கு எப்படித் தெரிந்திருக்கப் போகிறது? ஆமாம், உன்னை பார்த்ததைப் பற்றி அவள் என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே?’’