பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 295

‘'நான் தான் சொல்ல வேண்டாம் என்றேன், நீ அவசரப்பட்டு அப்பாவிடம் சொல்லிவிடப் போகிறாய் என்று!” -

‘உனக்குத் தெரியாதா, அவர் இப்போது அடியோடு மாறிவிட்டார்!”

‘அதை நீ நம்பாதே; புலி பாய்வதற்குக்கூடப் பதுங்கும்’ என்றாள் அவள்.

‘அதைத்தான் நானும் சொல்ல வேண்டுமென்று இருந்தேன்’ என்றான் அவன்.

LDறுநாள் காலை ஆபீசுக்கு வந்ததும் வராததுமாக இருக்கும்போதே மணியை அழைத்து, ‘இன்று மாலை நீங்கள் என்னுடன் வரவேண்டுமென்ற அவசியமில்லை; வேறு ஏதாவது வேலை இருந்தால் பார்க்கலாம். அதைச் சொல்லத்தான் உங்களை அழைத்தேன்; நீங்கள் போகலாம்’ என்றார் பரந்தாமன்.

‘மகிழ்ச்சி உங்களால் காப்பாற்றப்பட்டிருக்கும் அருணா மோகனின் தங்கை மட்டுமல்ல; என்னுடையத் தங்கையும் கூட’ என்றான் மணி.

“அது எப்படித் தெரியும், உங்களுக்கு?” என்றார் அவர். ‘மோகன் சொன்னான். அப்போதே நானும் நினைத்தேன், அதற்காகத்தான் நேற்று நீங்கள் என்னை அழைத்திருப்பீர்களென்று’ என்றான் அவன்.

‘ஓ, அப்படியா? அவள் இப்போதும் எங்கள் வீட்டில் தான் இருக்கிறாள்; நீங்கள் விரும்பினால் அவளை எப்போது வேண்டுமானாலும் அங்கே வந்துப் பார்க்கலாம்’ என்றார் அவர்.

‘வருகிறேன், அவசியம் என்று தோன்றும்போது’ என்றான் அவன்.

‘சரி, வாருங்கள்’ என்றார் அவர். அவன் அறையை விட்டு வெளியேறியதும் பிச்சை யாவை அழைத்து, ‘மோகனைக் கூப்பிடு’ என்றார் அவர்.