பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 297

இதைப் படித்ததும் அத்துடன் இருந்தக் கடிதங்களையும் புரட்டிப் பார்த்தான் அவன். அத்தனையும் காதல் கடிதங்கள்; அருணா, சுந்தருக்கு எழுதியக் காதல் கடிதங்கள்! - அடிப் பாவி, இவ்வளவு மோசமானவளா நீ?

அவன் வெகுண்டான் - அவனுடைய முகபாவத்தி லிருந்தே அதை ஒருவாறுப் புரிந்துக்கொண்ட பரந்தாமன் சொன்னார்; அழுத்தந் திருத்தமாகச் சொன்னார்:

‘'காதலிப்பது பெண்களின் குற்றமல்ல, இயற்கையின் குற்றம். அந்தக் குற்றத்துக்கு அவர்களை மட்டும் ஆளாக்கி விட்டு, ஆண்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. அதைச் சமூகம் அனுமதித்தாலும் நான் அனுமதிக்க முடியாது’

‘அப்படியானால்...’ அவன் முடிக்கவில்லை; அதற்குள் அவர் தொடர்ந்தார்: ‘இந்தக் கடிதங்கள் ஒரு விதத்தில் உங்களுக்கு நன்மையே செய்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இவற்றைப் பார்த்தபிறகுதான் நான் அருணாவை உடனேக் கல்யாணம் செய்துக் கொண்டு விடுவது என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன்!”

கொஞ்சங்கூடச் சலனம் இல்லாமல் அவர் இதைச் சொன்னதும், ‘உண்மையாகவா?’ என்றான் அவன், வியப்புடன்.

‘உண்மைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்போதுகூட ண்மைப் பேசாமல் இருக்க முடியுமா?’ என்றார் அவர், காந்தியின் சிலையைச் சுட்டிக் காட்டி.

அதற்குமேல் அவன் அவரை ஒன்றும் கேட்காமல் காந்தியின் சிலையைத் தன் முகத்தில் சாந்தி நிலவப் பார்த்தான்; ‘வஞ்சிக்கப்பட்டப் பெண்களுக்கு மறுபடியும் வாழ்வளிக்க வேண்டும்; அதற்கு வாலிபர்கள் தயங்காமல் முன் வர வேண்டும்’ என்று அன்றொரு நாள் அவர் சொன்னது அவனுடைய நினைவுக்கு அப்போது வந்தது!