பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காதலும் கல்யாணமும்

அவ்வளவுதான்; அளவு கடந்த சங்கோசத்துடன் இருகைகளையும் சேர்த்து இரு கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு, ‘ஊஹாம், நான் சொல்ல மாட்டேன்!” என்றான் அவன், நெளிந்து வளைந்து.

அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்: ‘ஒடுகிற நாயைத்தான் நீங்கள் துரத்துவீர்கள் போலிருக்கிறது!”

அவன் சொன்னான்; நாணிக் கோணிச் சொன்னான்: ‘ஓடாத நாணய நான் ஏன் துரத்த வேண்டுமாம்?” ‘'சரி, துரத்த வேண்டாம்; உட்காருங்கள்’ என்று சொல்லி அவள் அவனை உட்கார வைத்துவிட்டு, ‘உடம்பு பலவீனமாயிருப்பது கூட அவ்வளவு ஆபத்து அல்ல, உள்ளம் பலவீனமாயிருப்பது ரொம்ப ஆபத்து’ என்றாள் தானும் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து.

‘ஏன், என்னுடைய உள்ளம் பலவீனமாயிருக்கிறதா, என்ன என்று திடுக்கிட்டுக் கேட்டான் அவன்.

‘சந்தேகமில்லாமல்! இல்லாவிட்டால் உங்கள் எண்ணம் இவ்வளவு கீழே போயிருக்காதே?’ என்றாள் அவள், கொஞ்சம் வேகமாக,

“எதைச் சொல்கிறாய், நீ?” ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தோளோடு தோள் மட்டும் கூடியிருக்காது என்று சொன்னிர்களே, அதைச் சொல்கிறேன்!”

இப்போதுதான் அவன் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது; ‘என்னை மன்னித்து விடு, பாமா எண்ணத்தில் என்னைவிட நீ உயர்ந்து நிற்கிறாய் என்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். ஆனால்...’ என்று இழுத்தான், அவன்.

‘என்ன, சொல்லுங்கள்?’ என்றாள் அவள். ‘நீ பக்கத்தில் இருக்கும்போது என்ன பேசுகிறேன் என்பது எனக்கேத் தெரியவில்லை’ என்றான் அவன்.