பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. காதலும் கல்யாணமும்

கடற்கரைக்கும் வீட்டுக்குமாகத் தான் மட்டும் நடைப் பிணம்போல் நடந்துக் கொண்டிருக்க, அன்னபூரணி யம்மாளும், மோகனும் மட்டும் அருணாவைப் பற்றியக் கவலையே இல்லாமல் அவரவர்கள் அவரவர்களுடையக் காரியத்திலேயேக் கண்ணாயிருப்பது என்னவோ போலிருந்தது, ஆபத்சகாயத்துக்கு. இதில் ஏதாவது மர்மம் இருக்குமோ? என்று அவர் யோசித்தார், யோசித்தார் அப்படி யோசித்தார். ஒன்றும் புரியாமற் போகவே, ‘குழந்தையை நீ மறந்தே விட்டாயா, என்ன?’ என்றார் அவர், தன் மனைவியிடம்.

‘எந்தக் குழந்தையை?” என்றாள் அவள், வெடுக்கென்று. ‘அருணாவைத்தான் சொல்கிறேன்’ என்றார் அவர், அப்போதும் குழைவுடன்.

‘அட, என் குழந்தையே எத்தனை நாளாக அவள் உங்களுக்குக் குழந்தையானாள்?’ என்றாள் அவள், கேலியும் கிண்டலுமாக.

“எப்பொழுதுமே அவள் எனக்குக் குழந்தைதான். ஏன், உனக்குக் குழந்தையில்லையா, அவள்?”

‘யாரோ ஒருவனுடன் ஒடிப்போன பிறகு, அவள் ஏன் எனக்குக் குழந்தையாகிறாள்?”

‘யார் சொன்னது, அப்படி?” ‘நீங்கள் தானே சொன்னீர்கள்?” இதை அவள் சொன்ன வேகமும், அந்த வேகத்தில் தன் கன்னத்தை நோக்கி நீண்ட அவள் கையும் அவரை மேலும் நிலைகுலைய வைத்தன. “ஆமாம், சொன்னேன்; ஆத்திரத்தில் அறிவிழந்து நான்தான் அப்படிச் சொன்னேன்!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அவர் திரும்பினார். சின்னஞ்சிறு வயதில், தான் வேலைக்குப்