பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 299

போகும் நேரத்தில், அருணா தன் அம்மாவின் இடுப்பின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, டாடா சொல்லும் பாவனையில் எடுக்கப்பட்ட படம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. “ஐயோ, கண்ணே அப்போதெல்லாம் உன் மேல் நான் எவ்வளவு அன்பாயிருந்தேன் அந்த அன்பெல்லாம் இப்போது எங்கே பாழும் பணத்தாசை அந்த அன்பைக் கொல்ல, உன்னை நான் கொன்று விட்டேனே’ என்று வாய்விட்டுச் சொல்லி, மனம் விட்டு அழுதார்.

அப்போது, ‘இவர் ஏன் அழுகிறார் என்று கேட்டுக் கொண்டு உள்ளே வந்தான் மோகன்.

‘'அருமை மகள் அருணாவுக்காக!’ என்றாள் அன்னபூரணி, அலட்சியமாக

  • *

அட, பாவமே சுகானந்தத்துக்காகத்தான் இவர் அழுகிறாராக்கும் என்றல்லவா நான் நினைத்தேன்’ என்றான் அவனும் அதைவிட அலட்சியமாக

எப்படி இருக்கும் அவருக்கு ‘சொல்லட்டும், சொல்லட்டும்; யார் என்ன வேண்டுமானாலும் சொல் லட்டும். தான் செய்தத் தவற்றுக்கு அந்தத் தண்டனைகூட இல்லையென்றால் தன் மனமே தன்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறதே? சொல்லட்டும், சொல்லட்டும்; யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று நினைத்த அவர், தன்னைத் தானே ஒருவாறுத் தேற்றிக் கொண்டு, “என்னப்பா சங்கதி, என்ன சுகானந்தத்துக்கு என்று மெல்ல விசாரித்தார்.

‘உங்களுக்குத் தெரியாதா, இன்றுக் 5 F } u) மாரடைப்பால் அவர் காலமாகிவிட்டாராம்; இந்தப் பத்திரிகையில் அப்படி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது” என்று தன் கையில் இருந்தப் பத்திரிகையை அவருக்கு முன்னால் விட்டெறிந்தான் அவன்.

அதையும் பொருட்படுத்தாமல் அவர் அந்தப் பத்திரி கையை எடுத்துப் பார்த்தார்; அவன் சொன்னது உண்மை.