பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 303

கைது செய்து, அவன் கையிலிருந்த துப்பாக்கியைக் கைப்பற்றியதோடு அவனுடைய அப்பாவின் பிணத்தையும் கைப்பற்றினார்கள்.

LDறுநாள் காலை தன வாழ்நாளிலேயே முதன் முறையாக செய்த அந்த ஒரே ஒரு நல்லக் காரியத்தை அதாவது சுகானந்தரின் அருமை மகன் சுந்தரைப் பிடித்துப் போலீசிடம் ஒப்படைத்த அந்த ஒரே ஒரு நல்ல காரியத்தை எண்ணி ஆபத்சகாயம் தனக்குத் தானே ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, ‘மன்னிக்க வேண்டும்; உங்களுடைய உத்தரவில்லாமல் உள்ளே நுழைகிறேன்!” என்று யாரோ சொல்வது அவர் காதில் விழுந்தது; திரும்பிப் பார்த்தார். சொக்கலிங்கனார், மீனாட்சியம்மாள், ராதா, பார்வதி தம்பதிகள், பரந்தாமனின் தாயார் ஆகியோர் புடை சூழ மணி அவரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்போது இங்கே யோக்கியர்களுக்கு மட்டுமே இடம் உண்டு- வாவா, நீ என் உத்தரவில்லாமலேயே உள்ளே வா!’ என்றார் அவர்.

‘அப்படியா எல்லாம் பணம் படுத்தியப் பாடு போலிருக்கிறது, இருக்கட்டும்’ என்று சொல்லித் தன்னுடன் வந்திருந்தவர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, ‘இன்னும் சில யேர்க்கியர்கள் உங்களுக்குத் தெரியாமல் செய்துவிட்ட ஒரு சிறு தவறுக்காக உங்களிடம் மன்னிப்புக் கோர வந்திருக்கிறார்கள்; அவர்களையும் உள்ளே வரச் சொல்லட்டுமா?” என்றான் அவன்.

‘மன்னிப்பா அவர்கள் செய்த தவறுக்கு நான் செய்தத் தவறு ஒன்றும் குறைந்துவிடாது. வரச்சொல், உள்ளே” என்றார் அவர்.

அவ்வளவுதான்; பரந்தாமனுடன் மணக்கோலத்தில் இருந்த அருணாவும், பாமாவுடன் மணக்கோலத்தில் இருந்த மோகனும் விரைந்து வந்து, அவருடைய பாதங்களைப் பற்றினார்கள்.