பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 31

இருக்கேன்! நீயே எம்மாநேரம் இந்தக் குட்டியோட உட்கார்ந்து பேசிக்கிட்டுருப்பே? எழுந்து போடா, நானும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசறேன்!” என்று சொல்லிக் கொண்டே, மோகனின் கையைப் பிடித்து இழுத்து அப்பால் விட்டுவிட்டு, பாமாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்!

அவ்வளவுதான்; ‘'ஐயோ!’ என்று அலறி எழுந்தாள் அவள்!

“போலீஸ், போலீஸ் என்று கத்தினான் மோகன், எதற்கும் ஒடத் தயாராகிக்கொண்டே.

‘கேட்டியா, குட்டி? உன்னைக் காதலிக்கக்கூட அந்தப் பயலுக்குப் போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமாம்’ என்று சிரித்துக் கொண்டே எழுந்து, பாமாவை நெருங்கினான் அந்தப் பேர்வழி.

அப்போது மின்னல் வெட்டி மறைந்ததுபோல் எங்கிருந்தோ ஒரு குத்து வந்து அந்தப் பேர்வழியின் மேல் விழுந்து மறைந்தது; அவன் கீழே விழுந்தான்!

அந்தக் குத்துக்குரிய ஆபத்பாந்தவன் யார் என்று மோகன் பார்த்தபோது, ‘இருட்டி இவ்வளவு நேரம் ஆன பிறகுமா இங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பீர்கள்? போங்கள், சீக்கிரம் வீட்டுக்குப் போங்கள் என்றான் மணி.

5. மணி என்றொரு மானிடன்

‘மணி என்று ஒரு மானிடன் மட்டும்தானா இருக்கிறான், இந்த உலகத்தில்? எத்தனையோ மானிடர்கள் இருக்கிறார்களே?’ என்பார்கள் சிலர். ஆம், இருக்கிறார்கள். ஆனால் எதற்காக? தங்களுக்காக மட்டுமே வாழ்வதற்காக! அல்லது, சாவதற்காக!