பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காதலும் கல்யாணமும்

இந்தத் தன்மைக்கு முற்றிலும் மாறுபட்ட தன்மை யுள்ளவன், மணி. தனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்தே அவன் தனக்காக மட்டும் வாழவில்லை; பிறருக்காகவும் வாழ்ந்து வந்தான்.

இதன் காரணமாக இதுவரை எத்தனையோ தொல்லை களுக்கு உள்ளாகியிருந்தும், அந்தத் தொல்லைகளில் அவன் துன்பத்தைக் காணவில்லை; இன்பத்தையே கண்டு வந்தான்.இது அவனுடைய மனத்தின் இயல்பு

இந்த இயல்பை விரும்பாத சிலர் அவனைப் பேதை என்றும், பிழைக்கத் தெரியாதவன் என்றும் பழிப்பதுண்டு. அந்தப் பழி அவனுக்குச் சிறுமையைத் தேடித் தரவில்லை; பெருமையையே தேடித் தந்தது.

ஆனால் அந்தப் பெருமையால் அவன் தலை கனக்கவில்லை. மாறாக, அவன் மனம் மேலும் கொஞ்சம் துணிவு பெற்றது; கைகள் மேலும் கொஞ்சம் உரம் பெற்றன. தனக்கு முன்னால் யாருக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் சரி, அதை அவனால் தாங்க முடியாது; அதற்குரிய தண்டனையை அரசாங்கமோ, ஆண்டவனோ அளிக்கும் வரை அவனால் பொறுத்துக் கொண்டிருக்கவும் முடியாது!

“கொலை வாளினை எடடா,

கொடியோர் செயல் அறவே!” என்று பாவேந்தர் பாரதிதாசனார் பாடியிருக்கிறார் அல்லவா? அந்த வாளை அவசியமான போது எடுப்பதற்காக அவன் தேடிக் கொண்டிருப்பதில்லை; அதை எப்போதும் தன் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தான் அவன். ஆம், அவனுடைய கையே அந்த வாளாக இருந்து வந்தது.

அன்றும் வழக்கம்போல் தன் வாளைப் பயன்படுத்தும் வரை, கடற்கரையில் தனக்கு முன்னால் அநீதிக்கு உள்ளானவர்கள் மோகன் என்றோ, பாமா என்றோ