பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 33

அவனுக்குத் தெரியாது; பயன்படுத்திய பின்னரே தெரியும். இருந்தாலும், தன்னுடைய வியப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் தாக்குண்டவனைத் தானே தூக்கி நிறுத்தி, ‘உன் மனைவியிடம், உன்னுடைய மைத்துனியிடம்அல்லது, உன் தாயிடம், உன்னுடைய தங்கையிடம் உன்னைப்போல் ஒருவன் நடந்து கொண்டிருந்தால் உனக்கு எப்படி இருக்கும்?’ என்று கேட்டான் மணி.

அவன் நிலைகுலைந்து, ‘என்னை மன்னிச்சுடுங்க; இனிமே நான் இப்படிச் செய்ய மாட்டேன்!’ என்று மணியின் காலைப் பிடிப்பதற்காகக் கீழே குனிந்தான்.

‘சீ, இவ்வளவு கோழையா நீ? உன்னையா நான் அடித்தேன்? வெட்கப்படுகிறேன், உன்னை அடித்ததற்காக! வேதனைப்படுகிறேன், வாழ்க்கையில் உனக்கு நேரும் துன்பங்களையும் துயரங்களையும் வேறு வகையில் மறந்திருக்க முடியாத நீ, கள்ளச் சாராயத்தைக் குடித்தாவது அவற்றைக் கொஞ்ச நேரம் மறந்திருக்க முயலும் நிலையிலே இந்த நாடு உன்னை வைத்திருப்பதற்காக ஓடிப்போ! உன்னை ஆண்டவன் மன்னிக்கலாம்; ஆளுவோர் மன்னிக்கலாம். ஆனால் நான் மன்னிக்க மாட்டேன்; ஆம், உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்! போ, ஒடிப் போ!’ என்று அவனை ஒர் உந்து உந்தித் தள்ளி விட்டுத் தன் வழியே நடந்தான், மணி.

ஆண்மைக்குரிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் பாமா, அவள் எங்கே தன்னுடைய கையை விட்டுப் போய்விடுவாளோ என்று பயந்த மோகன், ‘'கிடக்கிறான், காலிப் பயல் நீ வா!’ என்று அவள் கையைப் பற்றி இழுத்தான்.

L_l fLs)ff திடுக்கிட்டு, ‘யாரைக் காலிப்பயல் என்கிறீர்கள்?’ என்று கேட்டாள், அவனுடன் நடந்து கொண்டே.

கா.க -3