பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 35

காட்டாவிட்டால் தேவிகா “ என்றான் அவன், எல்லோருக்கும் தெரிந்த உவமையுடன்

அவ்வளவுதான்; ‘'நல்ல சினிமாப் பைத்தியந்தான்!’ என்று சொல்லிக் கொண்டே அவள் கொஞ்சம் நெளிந்தாள். அதுதான் சமயமென்று அவள் இடுப்பில் கையைப் போட்டு வளைத்து, ‘நான் பெருமை கொள்கிறேன் பாமா, நான் பெருமை கொள்கிறேன்’ என்றான் மோகன், பரவசத்துடன்.

பாமா அவனுடைய கையை எடுத்து அப்பால் விட்டு விட்டு, ‘ஏனாம் ‘ என்று கேட்டாள், அவனை விட்டுக் கொஞ்சம் விலகி நடந்து.

‘என்னை இழுத்து அப்பால் விட்டுவிட்டு அந்தக் குடிகாரன் உனக்குப் பக்கத்திலே உட்கார்ந்ததற்காக; அவனை முன்னால் அனுப்பிவிட்டு, அவனுக்குப் பின்னால் அந்த மணிப்பயல் வந்ததற்காக’

† :

அட, கர்மமே அதற்காக நீங்கள் பெருமை கொள்வதாவது, கோபமல்லவா கொண்டிருக்க வேண்டும்?” ‘'சுத்த அநாகரிகமாயிருக்கிறாயே, நீ கோபம் யாருக்கு வரும், அநாகரிகமானவர்களுக்குத்தான் வரும் என் காதலியிடம் ஒருவன், நான் பக்கத்தில் இருக்கும்போதே தவறாக நடந்துகொள்ளத் துணிகிறான் என்றால், அவளுடைய அழகு, அந்த அழகை அவள் வெளிப்படுத்தும் முறை, எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்? அதற்காக நாகரிக புருஷனான நான் பெருமை கொள்வதா, கோபம் கொள்வதா?-நீயே சொல்லு?”

‘அது என்ன இழவோ எனக்குத் தெரிந்தவரை எந்தப் பெண்ணின் அழகும், அந்த அழகை அவள் வெளிப்படுத்தும் முறையும் ஆண்களுக்கு வெறியூட்டுவதாயிருக்கக் கூடாது; சாந்தி அளிப்பதாயிருக்கவேண்டும். அதனால்தான் என்னை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி, அலங்காரம்” என்னும் பேரால் அலங்கோலமாக்கிவிடும் என் அக்காவைக் கூட நான் சில சமயம் வெறுக்கிறேன்'