பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காதலும்கல்யாணமும்

இப்படி அவள் சொன்னாளோ இல்லையோ, ‘அபத்தம், அபத்தம் என் கனவுக் கன்னியின் புத்தி இப்படியாப் போகவேண்டும்? அடக் கடவுளே!இதன்ால்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உன் இடுப்பை வளைக்க என் கை முயன்றபோதுகூட நீ அதை எடுத்து அப்பால் விட்டுவிட்டாயா?-மோசம், மோசம் ரொம்ப ரொம்ப மோசம் உன்னைப் போன்ற பெண்கள் நிறைந்த இந்த நாட்டிலே பிறக்க நான் என்ன பாவம் செய்தேனோ? ரோமாபுரியில், அல்லது பிரான்சில் நான் பிறந்திருக்கக் கூடாதா? அங்குள்ள காதலர்கள் மக்கள் நடமாட்டம் மிக்க வீதிகளிலேயே என்னவெல்லாமோ செய்கிறார்களாமே? அதைப் பார்த்தும் பார்க்காததுபோல் மற்றவர்கள் போய்விடுகிறார்களாமே? அவையல்லவா நாகரிகம் மிக்க நாடுகள் அங்குள்ள மக்களல்லவா நாகரிகம் மிக்க மக்கள்?” என்று பிரலாபிக்க ஆரம்பித்துவிட்டான், அவன்.

அவள் அவனுடைய வாயைப் பொத்தி, ‘என்னை மன்னியுங்கள், இன்னும் அந்த அளவுக்கு நான் முன்னேறவில்லை’ என்றாள் மெல்ல.

அதற்குள் சாலைக்கு வந்துவிட்ட மோகன் ‘முன்னேறாவிட்டால் என்ன, முன்னேற்றத்தான் நான் இருக்கிறேனே ஏறு, எனக்குப் பின்னால்’ என்று தன் ஸ்கூட்டருக்குப் பின்னாலிருந்த nட்டை உற்சாகத்தோடு ஒரு தட்டுத் தட்டிக் காட்டினான்!

‘'வேண்டாம்; நான் பஸ்ஸிலேயே போய்விடுகிறேன்!” என்றாள் அவள்.

அவன் ‘ஓ'வென்று சிரித்துவிட்டு, ‘நீ இப்படிச் சொல்வாய் என்று தெரிந்துதானே எல்லா பஸ்களும் போகட்டுமென்று நான் இவ்வளவு நேரம் உன்னுடன் பேசிக்கொண்டிருந்தேன்?” என்றான், அவளை ஏற இறங்கப் பார்த்தபடி,