பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 39

‘இரண்டையுந்தான்! பத்துப் பதினைந்து நாட்களாகப் படித்துப் படித்து, எழுதி, எழுதி, போதும் போதும் என்று ஆகிவிடவில்லையா, நமக்கு? ஒரே போர்!” என்றாள் அருணா.

‘போருக்கு என்னடி, தமிழ்?’ என்று கேட்டாள் பொற்கொடி.

‘'சுவர்ணலதா என்ற பெயரைப் பொற்கொடி என்று மாற்றி வைத்துக் கொண்டுவிட்ட உனக்கே அதற்குத் தமிழ் என்னவென்று தெரியாதபோது, எனக்கு எங்கே தெரியப் போகிறது?” என்றாள் அருணா.

அப்போது, ‘உன்னை யாரோ ‘போனில் கூப்பிடுகிறார்களாம்!’ என்று சொல்லிக்கொண்டே, உள்ளேயிருந்து வந்தாள் உமா.

‘என்னையா?’ என்று கேட்டுக்கொண்டே அருணா சென்றதும், ‘அது யாரடி, அது? அவளை எப்போது பார்த்தாலும் போனில் கூப்பிட்டுக்கொண்டிருப்பது?’ என்று கேட்டாள் பொற்கொடி, தன் குரலைத் தாழ்த்தி.

“அவன்தான், சுந்தரி, சுந்தரி என்று சொல்லி, இங்கே உள்ளவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறானே, அந்த சுந்தர்’ என்றாள் உமா, தானும் தன் குரலைத் தாழ்த்தி.

‘அந்த ரகசியம் உனக்கு எப்படித் தெரிந்தது?” ‘எனக்குத் தெரியாத ரகசியமா, இங்கே? போடி!” என்றாள் அவள், பெருமிதத்துடன்.

‘ம், சரியான சமயத்தில்தான் அவன் அவளைக் கூப்பிட்டிருக்கிறான்; இனி போர் ஜாலியாகிவிடும், அவளுக்கு’ என்றாள், இவள் பெருமூச்சுடன்.

அந்தச் சமயத்தில் அருணா திரும்பி வர, “என்னடி, சுந்தரிதானே?” என்றாள் உமா, ஏதும் அறியாதவள்போல.

‘ஆமாம், அவளைப் பார்க்க இன்று யாரோ ஒரு மாப்பிள்ளை பம்பாயிலிருந்து வருகிறானாம்; அவனை நீயும்