பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 41

உனக்கு பட்டப் பரீட்சையென்றால், இங்கே எனக்கு நீ காதல் பரீட்சையல்லவா வைத்துவிடுகிறாய்?”

‘அதில் பரிபூரண வெற்றியடைந்த உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! எங்கே நீங்கள் பொறுமை இழந்து கலாசாலை வாசலில் வந்து நின்று விடுவீர்களோ என்று நான் ஒவ்வொரு நாளும் பயந்துக் கொண்டிருந்தேன்’ ‘அந்தக் கவலை உனக்கு வேண்டாம்; அப்படிப்பட்ட தர்மசங்கடத்துக்கு என்றுமே உன்னை நான் உள்ளாக்க மாட்டேன்’

‘யார் கண்டது? தனக்கிருந்த அத்தனை தடைகளையும் மீறி ஜூலியட்டைத் தேடிக்கொண்டு ரோமியோ வந்துவிட்டதைப் போல நீங்களும் வந்துவிட்டால்?”

‘'காதலில் தோல்வியடைந்த அவர்களை ஏன் நீ இப்போது நினைக்கிறாய்? இப்படி உட்கார்!” என்று அங்கிருந்த ஒரு மரத்தின் அடியைக் காட்டினான் சுந்தர்.

‘அவர்கள்தானே மக்கள் மனத்தில் நிற்கிறார்கள்?” என்று சொல்லிக்கொண்டே, அவன் காட்டிய இடத்தில் உட்கார்ந்தாள் அருணா.

‘உண்மைதான்; காதலைப் பொறுத்தவரை வெற்றி யடைந்தவர்கள் ஏனோ மக்கள் மனத்தை விட்டு மறைந்து விடுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டே, சுந்தரும் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, அதுவரை தன் தோளில் தொங்கியவாறு பாடிக் கொண்டிருந்த டிரான்சிஸ்டர் ரேடியோவை எடுத்து அவளுக்குப் பக்கத்தில் வைத்தான்.

‘இதை எப்போது வாங்கினர்கள் என்று கேட்டாள் அவள்.

‘வாங்குவதாவது அப்பா இதை எங்கிருந்தோ கடத்திக் கொண்டு வந்தார்; நான் அவரிடமிருந்து கடத்திக் கொண்டு வந்துவிட்டேன்’

‘உங்கள் வியாபாரமே கடத்தல் வியாபாரம்தான் போலிருக்கிறது?"