பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காதலும் கல்யாணமும்

‘அதற்காக உன்னையும் நான் கடத்திவிடுவேன் என்று நீ பயந்துவிடாதே’

அவள் சிரித்தாள். அவனும் சிரித்தான். அவ்வளவுதான்; அதுவரை அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த யாரோ இருவர், அவசரம் அவசரமாக எழுந்து வந்து அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்கள்

“என்ன அவசரமோ?’ என்றாள் அருணா, சுந்தரை ஒரு கண்ணாலும், அவர்களை இன்னொரு கண்ணாலும் பார்த்துக் கொண்டே.

‘ஒன்றுமில்லை; ஒர் ஆணும் பெண்ணும் சேர்ந்தாற் போல் எங்கேயாவது இருந்துவிட்டால் போதும், அதுவே ‘மியூலியமாகிவிடுகிறது அவர்களுக்கு’ என்றான் சுந்தர்.

‘நான் அப்படி நினைக்கவில்லை; ஒரு வேளை இந்த ரேடியோ அதற்குக் காரணமாயிருக்கலாம்!” என்றாள் அவள்.

‘உனக்கு ஏன் சந்தேகம்? இதோ நிறுத்திப் பார்த்தால் போச்சு’ என்று ரேடியோவை நிறுத்தினான் அவன்.

ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒன்பது நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று; அவர்கள் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை!

‘சரி, நாம் எழுந்து போய்விடுவோமா?’ என்று எழுந்தாள் அவள்.

‘அதுதான் தவறு; ஒடுபவர்களைக் கண்டால் அவர்கள் துரத்துவதை விடமாட்டார்கள்-நீ இங்கேயே உட்கார்’ என்று அவன் அவளை உட்கார வைத்துவிட்டு, மீண்டும் ரேடியோவைத் திருப்பி வைத்தான்.

‘உங்களுக்குக் கூட இலங்கை வானொலி நிலையத் தாரைத்தான் ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது?” என்றாள் அவள்.