பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 43

‘ஆம்; அதற்காக என்னுடைய தரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதே, நீ” என்றான் அவன்.

அருணா சிரித்தாள்: சுந்தரும் சிரித்துக்கொண்டே, ‘இப் போது நீ எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டுமே?” என்றான்.

‘என்ன உதவி?’ என்று கேட்டாள் அவள். ‘ஒன்றுமில்லை; கல்கத்தாவிலிருக்கும் என் நண்பன் ஒருவன் எனக்காக ரசகுல்லா வாங்கி அனுப்பியிருக்கிறான். அதைத் தின்பதில்தான் நீயும் எனக்கு உதவ வேண்டும் என்கிறேன், நான்’ என்று சொல்லிக்கொண்டே, கையோடு கொண்டு வந்திருந்த டப்பியைத் திறந்து அவளுக்கு எதிர்த்தாற்போல் வைத்தான் அவன்.

அதில் ஒன்றை எடுத்துச் சுவைத்துக்கொண்டே, ‘இந்த ரசகுல்லாவுக்காகக் கல்கத்தாவுக்கே குடியேறிவிடலாம் போலிருக்கிறதே?’ என்றாள் அவள்.

‘அதெற்கென்ன? அப்படியே போய்விட்டால் போச்சு, கல்யாணமானதும்’ என்றான் அவன்.

‘அவ்வளவு &FQ) L1 to fro, நடந்துவிடுமா, நம் கல்யாணம்

‘ஏன், நடக்காதா?” “எப்படி நடக்கும்? ‘பெரியோர்கள் பார்த்து நிச்சயித்த கல்யாண'மாயிருந்தால் சுலபமாக நடக்கும்; இதுதான் ‘சிறியோர்கள் பார்த்து நிச்சயித்த கல்யாணமாயிருக்கிறதே?” ‘அந்தக் கல்யாணத்துக்கு நீ ‘வில்லி'யாயிருந்தால், இந்தக் கல்யாணத்துக்கு உன் அப்பா வில்லனாயிருப்பார் போலிருக்கிறது?” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

‘அப்படித்தான் நினைக்கிறேன் நான்’ என்றாள் அவள், ஆழ்ந்த சிந்தனையுடன்.

‘அதனாலென்ன, பதினெட்டாவது வயதை நீ தாண்டி விட்டால் போதும்-நம்முடைய கல்யாணத்தை நாமே நடத்திக் கொண்டு விடலாம்!” என்றான் அவன், தான் ஒரு