பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 காதலும்கல்யாணமும்

நடத்திக் கொண்டு விடலாம்!” என்றான் அவன், தான் ஒரு சட்டக் கல்லூரி மாணவன் என்பதைச் சற்றே அவளுக்கு நினைவுபடுத்தி!

‘அந்தத் தைரியம் உங்களுக்கு இருந்தால் எனக்கும் இருக்கும் என்றாள் அவள், தரையைக் கீறிக்கொண்டே.

‘அப்புறம் என்ன? நாம் ரோமியோ-ஜூலியட்டாக வேண்டாம்; லைலா-மஜ்னுவாக வேண்டாம்; அம்பிகாபதி. அமராவதியாக வேண்டாம்; பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தம்பதிகள் ஆகிவிடலாம்!’ என்றான் அவன், அவள் கீறிய கோட்டை அழித்துக்கொண்டே!

7. ஐயா கூப்பிடுகிறார்!!!

விஷயம் எதுவாயிருந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் எப்பொழுதுமே வல்லவன், மோகன். எனவே, மணி லீவு எடுத்துக் கொண்டதும் அவனுக்கு ஒருவிதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அந்த லீவைக் காரணமாக வைத்துக்கொண்டு, ‘பார்த்தாயா, பாமா? அவனுக்கே நம்முடைய முகத்தில் விழிக்க அவ்வளவு சீக்கிரம் அவன் மனம் இடம் கொடுக்கவில்லை போலிருக்கிறது; அதனால்தான் லீவு எடுத்துக் கொண்டு விட்டான்’ என்று அவன் அவளிடம் கரடி விட்டான்; அந்தக் கரடியை அவளும் நம்பினாள்-நம்பாமல் என்ன செய்ய முடியும், தன்னுடைய அழகில் தனக்கே இருந்த ஒரு நம்பிக்கையை அது மேலும் கொஞ்சம் உறுதிப்படுத்திக் கொள்ள உதவும்போது?

இந்த நிலையில் ஒரு நாள் அவளிடம் வந்து, ‘ஐயா, கூப்பிடுகிறார்!” என்றான் பியூன் பிச்சையா. r

“என்னையா?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் பாமா.

“ஆமாம், உங்களைத்தான்’ என்றான் அவன்.