பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 45

வந்ததும் வராததுமாக ஐயா தன்னை ஏன் கூப்பிட வேண்டும்? தனக்குத் தெரிந்து வேலையில் தான் எந்தவிதமான தவறும் செய்யவில்லை-அப்படியிருக்க அவர் தன்னை அழைக்கக் காரணம்?

‘ஏன் பிச்சையா, எதற்காகக் கூப்பிடுகிறார்?’ ‘அதெல்லாம் எனக்கு எப்படி அம்மா, தெரியும்?கூப்பிடச் சொன்னார், கூப்பிடுகிறேன்-அவ்வளவுதான் தெரியும், எனக்கு!”

‘சரி, இதோ வந்துவிட்டேன் என்று சொல்’ என்று அதுவரைதான் பார்த்துக்கொண்டிருந்த ‘பைலைத் தூக்கித் தொப்பென்று கீழே போட்டுவிட்டு அவள் எழுந்தாள், பியூன் பிச்சையா அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

‘அடுத்தாற்போல் அவன் மோகனிடம் போவானோ?” என்று நினைத்த பாமா, அங்கேயே நின்றாள்; அவள் நினைத்தது நினைத்தபடியே நடந்தது-பிச்சையா மோகனை நோக்கித்தான் போய்க்கொண்டிருந்தான்.

‘சரி, நடப்பது நடக்கட்டும்’ என்று துணிந்து, பரந்தாமனின் அறைக்குள் நுழைந்தாள் அவள்.

‘வாருங்கள் உட்காருங்கள்!’ என்று தனக்கு எதிர்த்தாற் போல் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றைக் காட்டினார் பரந்தாமன்.

அவள் உட்காரவில்லை; ‘'சொல்லுங்கள்?’ என்றாள் நின்று கொண்டே.

‘மனிதாபிமானத்துக்குப் புறம்பான இந்த மரியாதைகள் யாரிடமிருந்து கிடைத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்வதில்லை; முதலில் நீங்கள் உட்காருங்கள்’ என்றார் அவர்.

அவள் உட்கார்ந்தாள்; அவர் சொன்னார்: ‘பொதுவாக இங்கே வேலை பார்ப்பவர்களின் சொந்த வாழ்க்கையில் நான் குறுக்கிடுவதேயில்லை; அதற்கு