பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காதலும்கல்யாணமும்

விரோதமாக என்னை நீங்கள் குறுக்கிட வைத்திருப்பது குறித்து நான் வருந்துகிறேன்!”

‘வருந்துகிறேன்!-இந்த வார்த்தையை அடிக்கடி அர்த்தமில்லாமல் பயன்படுத்தக் கூடியவர் அல்ல, அவர். எப்பொழுதாவது ஒரு சமயம்தான் உபயோகிப்பார்; அப்படி உபயோகிக்கும்போது, அதில் அர்த்தமில்லாமலும் போகாது. அத்தகையவர் இன்று தன்னிடம் ‘வருந்துகிறேன்’ என்று சொல்கிறார் என்றால், அவர் வருந்தக்கூடிய வகையில் தான் ஏதாவது தவறு செய்திருக்கத்தானே வேண்டும்1-அந்தத் தவறு ஒரு வேளை ‘அது'வாயிருக்குமோ?

இப்படி நினைத்த பாமா, தலை குனிந்துச் சொன்னாள்: ‘அப்படியொன்றும் இல்லையே?” ‘இருக்கலாம்; அப்படியொன்றும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மிஸ்டர் மோகனிடம் நீங்கள் கொண்டுள்ள தொடர்பு...’

அவ்வளவுதான்; ‘யார் சொன்னது, உங்களிடம்? அந்த மணி சொன்னாரா?’ என்று தன்னையும் அறியாமல் இரைந்தாள் பாமா.

‘இரையாதீர்கள்; அதனால் உங்களுக்குத்தான் தீமை! அதிலும் மிஸ்டர் மணி இருக்கிறாரே, அவர் எதையும் யாரிடமும் வாயால் சொல்லிக்கொண்டிருப்பவர் அல்ல; தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால், அதற்காக உடனே கையை நீட்டிவிடுவதுதான் அவருடைய வழக்கம்!” அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை, அவளுக்கு'அவர் இல்லையென்றால் அந்தப் பிச்சையா ஏதாவது உளறி யிருக்க வேண்டும்’ என்றாள், கண்களில் தீப்பொரி பறக்க. ‘அவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் உங்களைப் பற்றித் தெரியாதென்றா நினைத்துக்கொண்டிருக் கிறீர்கள்? தவறு பாமா, தவறு! இம்மாதிரி விஷயங்கள் காற்றைவிட வேகமாகப் பரவக்கூடியவை; அதிலும் நம்மவர்களுக்கு அவற்றைப் பரப்புவதில் எப்போதுமே ஒரு