பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 47

தனிச் சுவை உண்டு!-அதிருக்கட்டும், நான் சொல்ல வந்தது என்னவென்றால், மிஸ்டர் மோகனிடம் நீங்கள் கொண்டுள்ள தொடர்பு இயற்கையானது; வரவேற்கக் கூடியது; வாழ்த்தக் கூடியது. அதை யார் வெறுத்தாலும் நான் வெறுக்க மாட்டேன். ஆனால், வளரவேண்டிய இடம் இதுவல்ல; அதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்நீங்கள் போகலாம்’ என்று சொல்லி அவளை அனுப்பி விட்டுத் தம் மேஜையின்மேல் இருந்த மணியை ‘டங்கென்று அடித்தார்; மோகன் வந்து நின்றான். பரந்தாமனும் சட்டென்று எழுந்து நின்று, “மனப்பூர்வமான வாழ்த்துக்கள், உங்களுக்கும் புதிதாகக் கிடைத்திருக்கும் உங்கள் காதலிக் கும்’ என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

‘நன்றி; ஆனால் பழைய காதலி யாரும் இல்லையே சார், எனக்கு’ என்றான் அவன், அசட்டுச் சிரிப்புடன்.

‘மகிழ்ச்சி! ஆனால் உங்கள் காதல் வளர வேண்டிய இடம் இதுவல்ல; அதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்-நீங்கள் போகலாம் என்றார் அவர்.

ஆம், இருவருக்கும் ஒரே வார்த்தைதான்-அதற்கு மேல் எதற்கு என்று அவர் நினைத்தாரோ என்னமோ, தான் ‘நல்லவ'ரா யிருந்ததால்!

அன்று முழுவதும் அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை தன்னைப் படாத பாடு படுத்தி வைக்க, எப்படியோ காலத்தைக் கழித்துவிட்டு வெளியே வந்தாள் பாமா; மோகன் அவளுக்குப் பின்னால் வந்து, ‘என்மேல் கோபமா?’ என்றான் மெல்ல.

‘ஆமாம், போங்கள் உங்களால்தான் எனக்கு இந்த வம்பெல்லாம்’ என்றாள் அவள், வெடுக்கென்று.

‘இந்த ஒரு சோதனைக்கா இப்படி அரண்டு விட்டாய்? இன்னும் எத்தனையோ சோதனைகள் இருக்குமே, நமக்கு?” ‘இருக்கலாம்; ஆனால் அது மானத்தை வாங்கக் கூடியதாயிருக்கக்கூடாது, பாருங்கள்!’ என்றாள் அவள்.