பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காதலும்கல்யாணமும்

“யார் இப்போது மானத்தை வாங்கிவிட்டார்கள் மிஸ்டர் பரந்தாமன் நம்மைக் கூப்பிட்டுத் தம்முடைய வாழ்த்துக் களையல்லவா தெரிவித்திருக்கிறார்?’ என்றான் அவன்.

‘என்ன வாழ்த்தோ? எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை, போங்கள்’

இப்படிச் சொல்லிவிட்டு அவள் நடந்தாள்; அவன் தொடர்ந்து, ‘என்னையாவது பிடிக்கிறதா, அதுவும் இல்லையா?” என்றான் சிரித்துக் கொண்டே

அவ்வளவுதான்; அவளும் சிரித்துவிட்டாள்-அது போதாதா, அவனுக்கு? அவளுடன் ‘வெற்றிநடை போட ஆரம்பித்துவிட்டான்.

8. அபூர்வ சகோதரிகள்

அன்றிரவு பாமா படுக்கும்போது, “ஏண்டி திருடி, “எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல்லு, என்னிடம் சொல்லு என்று தானே உன்னிடம் சொல்லியிருந்தேன்? சொன்னாயா, என்னிடம்?” என்றாள் ராதா, வழக்கம்போல அவளுக்குப் பக்கத்தில் தன்னுடைய படுக்கையையும் விரித்துக் கொண்டே.

எதிர்பாராத இந்தக் கேள்வி பாமாவைத் தூக்கிவாரிப் போட்டது-எதற்காகத் தன்னைத் திருடி!’ என்று அழைத்து இப்படிக் கேட்கிறாள், தன் அக்கா? ஒரு வேளை இவளுக்கும் ‘அது’ தெரிந்துவிட்டிருக்குமோ?-எப்படித் தெரிந்திருக்க முடியும்? இவளுக்காகத்தானே அன்றிரவு அந்தப் புண்ணியவானுடன் ‘ஸ்கூட்டரில் வந்தபோது கூட நான் அந்தத் தெரு முனையிலேயே இறங்கி, அங்கிருந்து நடந்தே வீடு வந்து சேர்ந்தேன். இங்கே இருந்த அக்கா, அங்கே இறங்கிய என்னை எப்படிப் பார்த்திருக்க முடியும்?-ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. எனவே,