பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காதலும்கல்யாணமும்

இப்போதுதான் எனக்குத் தெரிகிறது, அக்கா! நீ எனக்கு அப்பாவும் அம்மாவும் மட்டுமல்ல; தெய்வம்!” என்றாள் நெஞ்சு நெக்குருக.

ராதா அவள் கன்னத்தைத் தன் கன்னத்தோடு ஒட்டவைத்துக் கொண்டு, “ஏண்டி, பாமா அந்தப் பிள்ளையாண்டானை ஒரு நாள் இங்கே அழைத்துவர முடியாதா, உன்னால்?” என்றாள் மெல்ல.

‘அவர் என்னமோ, வருகிறேன், வருகிறேன்!” என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்; நான்தான் அவரை இங்கே வரவேண்டாமென்று தடுத்துக்கொண்டிருக்கிறேன்!” ‘அதுதான் தப்பு என்கிறார்கள் வாத்தியாரம்மா!’ “அவர்களுக்கும் தெரியுமா, அது?” ‘'நல்ல கேள்வி கேட்டாய், போ! அவர்கள்தான் அன்றிரவு உன்னையும் அந்தப் பிள்ளையாண்டானையும் சேர்ந்தாற்போல் பாத்துவிட்டு வந்து என்னிடம் சொன் னார்கள்’

‘உண்மையாகவா, அக்கா?’ “ஆமாண்டி, ஆமாம்! இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு அவர்கள் ஐயாவுடன் சென்று கொஞ்ச நேரம் கடற்கரையில் உலாவிவிட்டு வருவதில்லையா? அப்போதுதான் உங்களைப் பார்த்தார்களாம். நீ வானொலி நிலையத்துக்கு எதிர்த்தாற் போலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி, அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்து விட்டாயாம்:

‘அடக் கடவுளே, என்னை யாரும் பார்க்கவில்லை என்றல்லவா இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன், நான்?”

‘அதனாலென்னடி, அவர்கள் உங்களைப் பார்த்ததும் ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று, நமக்கு!”

‘ஏனாம்?"