பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 காதலும்கல்யாண்மும்

‘அவளையும் அழைத்துக் கொண்டு வந்து நீ எங்கள் வீட்டில் வந்து படுத்துக்கொள்!”

‘ஏம்மா, அவர் இன்னும் வரவில்லையா?” “வந்து விட்டார்! விமானத்தில் வெளியூர் செல்லும் நண்பர் ஒருவரை வழியனுப்பி வைப்பதற்காக அவர் இப்போது மீனம்பாக்கம் போகவேண்டும் என்கிறார். மேலே படித்துக் கொண்டிருந்த பாலுவோ அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டான். அவனைத் தனியாக விட்டுவிட்டு நான் எப்படிப் போவேன், அவருடன்?”

‘அவனுக்காக நீங்கள் நிற்பானேன்? போய்விட்டு வாருங்கள் அம்மா, நாங்கள் போய் அவனுக்குத் துணையாகப் படுத்துக்கொள்கிறோம்’

‘கடவுள் மறைந்தார்; ‘பக்தை ராதா, தங்கை பாமாவை அழைத்துக் கொண்டு, தான் இருந்த வீட்டுக் கதவையும் இழுத்துப் பூட்டிக்கொண்டு, தம்பி பாலு தூங்கிக் கொண்டிருந்த தன் இறைவனின் உறைவிடத்திற்குச் சென்றாள்.

அந்த இறைவனின் உறைவிடம் வேறு எங்கும் இல்லை; அவள் இந்ந்த வீட்டுக்கு முன்னாலேயே இருந்தது. அந்த உறைவிடத்தில் இருந்த ஐயன் சொக்கலிங்கனார் சென்னை அரசாங்கக் காரியதரிசிகளில் ஒருவராக பணியாற்றி வந்தார்; அம்மை மீனாட்சியோ ராணி மேரி கல்லூரியின் பேராசிரியைகளில் ஒருத்தியாகப் பணியாற்றி வந்தாள். ‘புத்திர பாக்கியம் எதுவும் இல்லாத அவர்களுக்குப் ‘பொங்கிப் போடும் பாக்கியத்தைப் பெற்றிருந்தாள் ராதா.

அந்த ஒரு பாக்கியத்துக்காக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் எஜமானி-வேலைக்காரி என்று அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த தொடர்புதான் இன்று இந்த நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்திருந்தது-அபூர்வ சகோதரிகளுக்கு ஏற்ற அபூர்வ எஜமானிதான் இல்லையா?