பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 55

‘தெரியும்; தெரிந்தே இவனுக்கு நான் இங்கே வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்!”

“இவனால் உனக்கு எந்தவிதமான தொல்லையும் இல்லையா?”

‘இல்லை; என்னால்தான் இவனுக்குத் தொல்லை!” ‘உன்னால் இவனுக்குத் தொல்லையா!-இருக்காதே? அறையைக் கூட்டுவது முதல், கூஜாவில் தண்ணீர் கொண்டு வந்து வைத்துக்கொள்வதுவரை உன்னுடைய வேலைகளை யெல்லாம் நீயே செய்துகொள்வதல்லவா உன் வழக்கம்?”

‘அந்த வழக்கத்தை இன்னும் நான் கைவிடவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக இன்னொரு வேலை வைத்திருக்கிறேன் நான், இவனுக்கு’

‘அது என்ன வேலை?” ‘எனக்குக் கிடைக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றையெல்லாம் படித்து வடி கட்டும் வேலை!”

‘அதாவது, இது காதல் இல்லாத புத்தகம், இது காதல் இல்லாத பத்திரிகை என்று இவன்தான் உனக்கு வடிகட்டிக் கொடுக்கிறானா?”

“ஆம், அதனால் இவனுடைய நேரம் வீணாகிக்கொண்டு இருக்கிறது; என்னுடைய நேரம் மிச்சமாகிக்கொண்டு இருக்கிறது”

‘இது உனக்குச் சுயநலமாகத் தோன்றவில்லையா?” ‘'தோன்றுகிறது; ஆனால், அதே சமயத்தில் அது அவனைப் பழைய நினைவுகளுக்கு ஆளாக்காமல் தடுக்கிறதே?”

‘'எதுவாயிருந்தாலும் அதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறாயா, நீ?”

‘இல்லை! உனக்கு நன்மையாகத் தோன்றுவது எனக்குத் தீமையாகத் தோன்றலாம்; எனக்குத் தீமையாகத் தோன்றுவது உனக்கு நன்மையாகத் தோன்றலாம்!"