பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காதலும்கல்யாணமும்

“வேடிக்கையான மனிதன், நீ!’ ‘சங்கர் கூட அப்படித்தான் சொல்கிறான்.ஒருவேளை அதனால்தான் என்னுடைய நடத்தை சில சமயம் விபரீதமாகக் கூடப் போய்விடுகிறதோ, என்னமோ?உதாரணமாக, உன் காதலிக்கு முன்னால் அன்று நான் அவனை அடித்திருக்கக் கூடாது, இல்லையா?”

மோகன் சிரித்தான்; ‘ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டான் மணி.

‘ஒன்றுமில்லை; அன்று நீ எனக்காக அவனை அடித்து வீழ்த்தியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும், தெரியுமா? நான் அவளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு ஒடிப் போயிருப்பேன்; அன்றிலிருந்து அவளும் என்னைத் திரும்பிப் பார்க்காமல் போயிருப்பாள்”

‘இன்று?” ‘வெட்கப்படுகிறேன் மணி, அதை நான் உன்னிடம் சொல்ல வெட்கப்படுகிறேன்”

‘அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்களே, நீ ஏன் வெட்கப்படுகிறாய்?-சும்மா சொல்லு?”

‘சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டாயே?” ‘மாட்டேன்! ஏனெனில், நான் எப்போதுமே காதலர் களை என்னுடைய கோபத்துக்கு உரியவர்களாகக் கருதுவதில்லை; அனுதாபத்துக்கு உரியவர்களாகவே கருதுகிறேன்’

‘அந்த நம்பிக்கையில்தான் நானும் உன்மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்லி, என்னுடைய காதலைப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறேன்!”

‘அடி சக்கை புதுப்பித்துக் கொள்ளக் கூட முடியுமா, அதை?’

‘முடியும், உன்னைப் போன்றவர்கள் உதவினால்'