பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் sj

‘சரி, யாருக்காவது ஏதாவது ஒரு வகையில் நான் உதவினால் சரி! அப்புறம்?”

‘அதற்காக முதலில் நீ என்னை மன்னிக்க வேண்டும்’ ‘உனக்குத்தான் தெரியுமே-நான் யாரையும் மன்னிப்பது மில்லை, யாரிடமும் மன்னிப்புக் கேட்பதும் இல்லை என்று’

‘மன்னிக்காவிட்டால் என்னுடைய நன்றியையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்’

‘அதற்குதான் நாய் இருக்கிறதே, நாம் வேறு என்னத்துக்கு?-இதோ பார் மோகன், இவையெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்காக நமக்கு நாமே செய்து கொள்ளும் வார்த்தை ஜாலங்கள் மன்னிப்பு எதற்கு, மறுபடியும் தவறு செய்வதற்கு நன்றி எதற்கு, மறுபடியும் உதவி கோருவதற்கு இவற்றைத் தவிர அவற்றால் வேறு ஏதாவது பயனுண்டா, மனிதனுக்கு?”

‘பயன் இருக்கிறதோ, இல்லையோ? இந்த நாகரிக யுகத்தில் அவற்றில்தானே பண்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்?”

“எது நாகரிக யுகம், இதுவா நாகரிக யுகம்? ஒரு நாளும் இல்லை! இது நாகரிக யுகமாயிருந்தால் போலீஸ் ஸ்டேஷன் என்னத்துக்கு இருக்கிறது? போலீஸ்காரர்கள் ஏன் இருக்கிறார்கள்? சிறைச்சாலை என்னத்துக்கு இருக்கிறது. சிறைக் காவலர்கள் ஏன் இருக்கிறார்கள்?-'நாங்கள் அப்படியொன்றும் நாகரிகமானவர்களல்ல, அநாகரிகமானவர் கள்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லத்தானே?”

“ஆமாம் சார்! ஆனால் ஒன்று; அவையும் இல்லா விட்டால் என்னைப் போன்றவர்களின் கதி என்ன ஆகும், தெரியுமா? திருடினால் கூட வேலை கிடைக்காது!” என்றான் சங்கர், அப்போது இரண்டு கப் காபியுடன் அங்கே வந்து.

‘பார்த்தாயா, மோகன் திருடினால் வேலை"நிச்சயம்; கூலி நிச்சயம் கிடையாது. திருடாவிட்டால் வேலை நிச்சயம்