பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காதலும்கல்யாணமும்

கிடையாது; கூலியும் நிச்சயம் கிடையாது. இதுதான் நாம் வாழும் நாகரிக யுகம்-இந்த நாகரிக யுகத்தில் நன்றியாவது, மன்னிப்பாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை; நீ காபி சாப்பிடு!’ என்று ஒரு கப் காபியை எடுத்து அவனுக்கு முன்னால் வைத்தான் மணி.

‘இது காதல் காபியா, காதல் இல்லாத காபியா?” என்றான் மோகன், சிரித்துக்கொண்டே

‘'சுவைத்துப் பார் சர்க்கரை இருந்தால் காதல் காபி; இல்லாவிட்டால் காதல் இல்லாத காபி என்றான் மணி.

‘நீரழிவு நோயால் பீடிக்கப்பட்டவர்கள்தான் சர்க்கரை இல்லாத காபி சாப்பிடுவார்கள்; நீயுமா அந்த நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறாய்?”

‘இல்லை; நமது சமூகம் அந்த நோயால் பீடிக்கப் பட்டிருக்கிறது.அதற்காக நான் இருக்கும் பத்தியம், இது’

‘நீ ஒருவன் பத்தியம் இருந்தா அந்த நோய் தீர்ந்துவிடப் போகிறது?”

‘ராமபிரான் சேதுபந்தனம் கட்டும்போது ஆஞ்சநேயரின் பரிவாரங்கள் மட்டுமா உதவின அணிலும் உதவித்தானே இருக்கிறது?”

‘நீ அணில் அல்ல; ஆஞ்சநேயன்!” ‘ஆம்; ஆஞ்சநேயனாக இருக்கத்தான் விரும்புகிறேன், நான்’ என்றான் மணி கம்பீரமாக.

‘அப்பா ஆஞ்சநேயா, அடியேன் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலாமா’ என்றான் மோகன், அதுதான் சமயமென்று.

“தாராளமாக என்ன விண்ணப்பம் பக்தா?”

“என்னுடைய நன்றியை நீ ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி-எனக்கு நீ மேலும் ஒர் உதவி செய்ய வேண்டும்"